சவுதிஅரேபியாவில் ஈழத்தமிழர் அனோஜன் சிவராஜாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது
நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆஜராகியிருந்த அனோஜனின் சட்டத்தரணி அவருக்கு முன்னர் வழங்கப்பட்ட தண்டனை தற்போது மரணதண்டனையாக மாற்றப்பட்டுள்ளது என்பதை இலங்கை தூதரகத்திற்கு வாய்மூலம் அறிவித்துள்ளார்.
எனினும் சவுதிஅரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் அந்த நாட்டின் நீதித்துறை அதிகாரிகளிடமிருந்து எழுத்து மூல அறிக்கைக்காக காத்திருக்கின்றது.அந்த அறிக்கை மூலமே உத்தியோகபூர்வ தீர்மானம் அதற்கான காரணங்கள் குறித்து தெரியவரும்.
கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தின் பொறுப்பதிகாரியுடன் இது குறித்து பேச்சுக்களில் ஈடுபட்ட இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையையும் அனோஜன் குடும்பத்தினரின் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துள்ளது.
ஒருமாத காலத்திற்குள் இந்த தீர்ப்பிற்குஎதிராக சவுதி அரேபிய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்இஇதனடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்குள் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.