ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.
கட்டுநாயக்கவிலிருந்து தலவாக்கலை – லிந்துலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே, நேற்று திங்கட்கிழமை (15) மாலை 4:00 மணியளவில் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓட்டுனருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாகவே முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.