-
ஹரக் கட்டா தரப்பிடமிருந்து 1200 இலட்சம் ரூபா இலஞ்சம் முற்பணமாக பெற்றதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித அபேசிங்க மற்றும் சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண வருன ஆகியோரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரக் கட்டாவை பாதுகாப்பதற்காக அவரது மனைவியிடமிருந்து 1200 இலட்சம் ரூபா இலஞ்சம் முற்பணமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித அபேசிங்க, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சத்துரங்க ஆகியோர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (3) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த மூவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த ஜூன் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.