உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் வழக்குகளில் இருந்து ஆரம்பத்திலேயே தங்களை விடுவிக்குமாறு முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலாந்த ஜயவர்தன ஆகியோர் முன்வைத்த கோரிக்கைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இழப்பீட்டு வழக்குகள், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி காலாவதியாகிவிட்டதாக முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையை முதன்மையான சட்டப் பிரச்சினையாகக் கருத நீர்கொழும்பு முன்னாள் மாவட்ட நீதிபதியும் தற்போதைய கொழும்பு மாவட்ட நீதிபதியுமான லலித் கன்னங்கரவால் 2024.12.11ஆம் திகதியன்று வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு நிராகரித்துள்ளது