முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சோகம் எம் உயிர் உள்ள வரை மறக்க முடியாதது – தமிழர் விடுதலைக் கூட்டணி

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது. அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், தேசிய ஒருங்கிணைப்பாளருமான செ.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்கால் நினைவேந்தல் குறித்து இன்று (16) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை தமிழர் வரலாற்றில் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களிலும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சோகம் எம் உயிர் உள்ள வரை மறக்க முடியாததாகும்.

இன முரண்பாடுகள் உருவானதன் காரணமாக இலங்கை அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கொடிய யுத்தம் நடைபெற்றது. இந்த நாட்டின் விலைமதிப்பற்ற இளைஞர்கள் தமது இளம் வயதிலேயே உயிரிழந்தார்கள். பொருளாதார அழிவு மதிப்பிட முடியாத அளவிற்கு இருந்தது. அதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்தபோது மக்களின் இழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. பெருமளவான மக்கள் மரணமடைந்தார்கள். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தார்கள். இலட்சக்கணக்கானோர் மரணத்தை எதிர்நோக்கிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி இரு தரப்பினரிடமும் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்திக்கொண்டிருந்தது.

தமக்கு வாக்களித்த மக்களை காப்பாற்ற அன்றைய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தவறியது மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஒளிந்துகொண்டார்கள். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி எந்த ஆசனங்களும் இல்லாத நிலையிலும் ஒரு கட்சியாக தனது கடமையைச் செய்தது.

இறுதி யுத்தத்தின்போது அப்போதைய அரசுத் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ஷ அனைத்து தமிழ்க் கட்சிகளையும் சந்திப்பதற்காக அலரி மாளிகைக்கு அழைத்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கலந்துகொண்டது.

அப்போது முள்ளிவாய்க்காலில் வெறும் 75,000 பேர் மட்டுமே உள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே அப்பகுதியில் இருந்த அதிகாரிகள் மூலம் தகவல்களைத் திரட்டி வைத்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர், முள்ளிவாய்க்கால் பகுதியில் 325,000 மக்கள் அகப்பட்டுள்ளதாகக் கடுமையாக வாதிட்டார்.

ஆனால் அரச ஆதரவு தமிழ் குழுக்கள், கூட்டணித் தலைவர் புலிகளின் தகவல்களை வைத்து பேசுகிறார் என அவரை ஏளனமாகப் பார்த்தார்கள். இருப்பினும் அவர் சிறிதும் தயக்கமின்றி ஜனாதிபதியுடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார்.

இறுதியில் கோபமடைந்த மகிந்த ராஜபக்ஷ, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரை நோக்கி, ‘சங்கரி நான் 325,000 மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் அனுப்புகிறேன். அவர்களிடம் சொல்லுங்கள் — அவற்றைப் பயன்படுத்திவிட்டு எமது படையினருக்கு எதிராகப் போராடும்படி!’ என்று கூறிவிட்டு தனது இரண்டு கைகளையும் மேசையில் அடித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். இதை அனைத்து ஊடகவியலாளர்களும் அரச சார்பு தமிழ்க் கட்சித் தலைவர்களும் (சித்தார்த்தன், கருணா, பிள்ளையான், டக்ளஸ்) பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இறுதி யுத்தம் நிறைவடைந்தபோது மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியே வந்தார்கள். அதேவேளை, மன்னார் பேராயரின் கருத்துப்படி 146,000 பொதுமக்கள் உயிரிழந்திருந்தார்கள் என்பதும் வேதனையானது, யாராலும் மறுக்க முடியாத உண்மை.

அன்று மகிந்தவுடன் தர்க்கப்பட்டு உண்மையை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், 75,000 மக்கள் கூட உயிருடன் வந்து சேர்ந்திருப்பார்களா என்பது தெரியாது. இந்த பாரிய இன அழிவைத் தடுக்க தமிழர் விடுதலைக் கூட்டணி சரியான சந்தர்ப்பத்தில் முயற்சி எடுத்தது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அண்மையில் கனடாவில் இருந்து அழுது கொண்டு பேசிய ஜயா ஒருவரின் உரை அனைவருக்கும் சான்றாக உள்ளது.

முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எந்தவொரு சிங்களக் கட்சிகளோ அல்லது தமிழ் பேசும் இஸ்லாமியக் கட்சிகளோ அதைக் கண்டிக்கவில்லை. நாம் அன்று தனித்து விடப்பட்ட இனமாக இருந்தோம். பனையேறி விழுந்தவனை மாடேறி மிதித்தது போல், செட்டிக்குளம் தடுப்பு முகாமில் நடைபெற்ற கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. அப்பாவி இளைஞர்களும் யுவதிகளும் அனுபவித்த துன்பங்கள் நவீன கால கொடுமைகளாக இருந்தன.

கொத்துக்கொத்தாக இளைஞர்களையும் யுவதிகளையும் அள்ளிச் சென்றார்கள். இறுதியில் சிலர் விடுவிக்கப்பட்டனர். பலர் காணாமல் ஆக்கப்பட்டவர்களாகி விட்டனர். முள்ளிவாய்க்கால் அவலத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது. சிலர் அதை ஏகபோக உரிமையாகக் கொண்டாடுவது மட்டுமல்லாது, மீண்டும் தமிழ் மக்களை பிழையான பாதைக்கு இட்டுச்செல்ல முயற்சிக்கின்றார்கள்.

தமிழர் மத்தியில் மறக்க முடியாத இந்த சோகமான மாதத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும், விசேடமாக இந்தியாவிடமும், சாத்தியமான அரசியல் தீர்வினை வேண்டி நிற்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

756724618_1047290304383453_223524354740937400_n

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.

July 27, 2026

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் 01 பிரதான வீதியில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று

suresh11

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு; நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

July 27, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்