முல்லைத்தீவு – விசுவமடு மகா வித்தியாலயத்தில் உள்ள பாதுகாப்பற்ற கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்களை அமையுங்கள்!

முல்லைத்தீவு – விசுவமடு மகா வித்தியாலயத்தில் உள்ள 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பாதுகாப்பற்ற கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்களை அமைப்பதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அந்தப் பாதுகாப்பற்ற கட்டடங்களால் பாடாசாலை மாணவர்களுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டால் முல்லை வலயக் கல்விப் பணிமனையே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது எச்சரித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ரவிகரன் மேலும் தெரிவிக்கையில்,

நான் பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று, பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன்.

அந்த வகையில் விசுவமடு மகா வித்தியாலயத்தில் ஐம்பது வருடங்களுக்கும் மேற்பட்ட பழமையான கட்டடம் இருக்கின்றது.

அந்தக் கட்டடம் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அல்லது குறித்த கட்டடம் உரிய தொழில்நுட்பவியலாளர்களால் பார்வையிடப்பட்டு உரிய சீரமைப்பு வேலைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அங்கு கூடுதலான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில் இந்த பழைய கட்டடங்கள் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படாவிடின் அந்தக் கட்டடங்களால் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இவ்வாறான பாதுகாப்பற்ற பழைய கட்டடங்களால் அங்கு கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனையே முழுப் பொறுப்பாகும்.

எனவே அந்த பழைய கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்களை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது அந்தக் கட்டடங்களைச் சீரமைத்துக் கொடுக்கப்படுமா? இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என்பதை அறிய விரும்புகின்றேன் என்றார் ரவிகரன்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்ட குறித்த விடயத்தினை தாம் முல்லை வலயக் கல்விப் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்துவதாக, வலயக் கல்விப் பணிமனை சார்பாக குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதியால் இதன்போது பதிலளிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இந்த விடயத்தினைத் தெரியப்படுத்தி, பழைய ஆபத்தான பாடசாலைக் கட்டடத்தை அகற்றி புதிதாக அமைக்கவோ அல்லது சீரமைக்கவோ உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ரவிகரன் கூறினார்.

அத்தோடு பாடசாலைகளில் இவ்வாறான ஆபத்தான பழைய கட்டடங்கள் இருந்தால் அவை தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறு, பிரதமர் ஹரிணி அமரசூரிய தம்மிடம் நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே இது தொடர்பான கோரிக்கைக் கடிதங்களை உரிய தரப்பினருக்கு அனுப்புவதுடன், அந்தக் கோரிக்கைக் கடிதங்களின் பிரதிகளைத் தமக்கும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்ட ரவிகரன், தம்மாலும் இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அழுத்தம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண