இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள மதீஸ்வரி அம்மன் ஆலயத்திலிருந்து நயினாதீவு அம்மன் ஆலயம் நோக்கி அதிகளவிலான யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் கப்பல் சேவையின் ஊடாக, 86 யாத்திரிகர்கள் அடங்கிய குழுவினர் இன்று(01.11.2026) காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
மதீஸ்வரி அம்மன் ஆலயப் பிரதம குரு மற்றும் ‘வஜீஸ்வரிமாதா பவுண்டேசன்’ அமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த ஆன்மீக யாத்திரிகர்கள் குழுவினர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தரிசனத்துக்காக வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.