மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்

சமூக வலைத்தளங்களில் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பவர்கள், அத்தகைய செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். ஊவாபரணம – அலகொல்ல தோட்டத்தில் 13 ஆண்டுகளாக மண்சரிவு அபாய வலயத்தில் வாழ்ந்து வந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் பல தலைமுறைகளாக கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து, நாட்டின் பெருந்தோட்டத் துறையின் ஊடாக […]
இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்!

செப்டம்பர் மாதத்தின் முதல் 27 நாட்களில் நாட்டுக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 143,623 ஆக உயர்ந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டுக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவே முதலிடத்தைப் வகித்து வருகின்றது. இம்மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 32 சதவீதமான 45,679 பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இரண்டாவதாக சீனா பதிவாகியுள்ளதுடன், அங்கிருந்து 10,081 சுற்றுலாப் பயணிகள் வருகை […]
இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற முகாம் ஆட்சியர்!

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் மீது அதிகாரி ஒருவரால் காலணி வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆணையாளர் சதீஷ் நேற்று (30) மாலை நேரில் சென்று விசேட ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகளை நேரில் சந்தித்த ஆணையாளர், அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து இந்தியாவுக்குச் சென்றவர்களில் சிலர், […]
சிங்கப்பூரில் இருந்து ஷிரந்தி வராவிட்டால் காத்திருக்கும் ஆபத்து!

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறிவித்துள்ள ஷிரந்தி ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவில்லையெனில் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ச விசாரணைகளுக்கு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான், அவர் மருத்து சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. எனவே, ஏனையவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் […]
நாட்டை விட்டு வெளியேறும் பல அரச அதிகாரிகள்..

அதிகரித்து வரும் வரிச்சுமையால் நாட்டின் திறமையான பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களுக்கு மேலதிக வரி நிவாரணங்களை வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. 2021/2022 ஆம் ஆண்டிலிருந்து 2,500க்கும் மேற்பட்ட நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் ஏனைய மருத்துவ அதிகாரிகள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இதற்கு அதிக வரியே முக்கிய காரணம் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 2023 ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட வரித்திருத்தங்களால் தொழில்வல்லுநர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
அவசர கடன் பெறுபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இணையவழியில் உடனடி கடன் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட நிறுவனம் விதித்துள்ள நிபந்தனைகளை சரியாகப் புரிந்துகொண்டு கடன் வசதிகளைப் பெறுமாறு பொலிஸ் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்கவும், நிதி இழப்புகளைத் தடுக்கவும் அவை உதவும் என்று பொலிஸ் வலியுறுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் விளம்பரங்கள், இணையம் மற்றும் கைபேசிச் செயலிகளைப் பயன்படுத்தி இணையவழியில் உடனடிக் கடன்களைப் பெறும் ஒரு முறை குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் பெற்ற […]
60 நாட்களுக்குள் பதில் வேண்டும்.. ஐநாவிடமிருந்து அரசிற்கு அழுத்தம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பல மனித உரிமை நிபுணர்கள் இலங்கை அரசிடம் கவலை வெளியிட்டுள்ளனர். 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், 2026 பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை […]
இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால் பலமான அரச சேவை இல்லாமையே – ஜனாதிபதி

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளின் தனித்துவமான சேவையைப் பாராட்டும் வகையிலான “விசிஷ்ட சேவா விபூஷண” (Vishishta Seva Vibhushana) பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. குறைந்தது 25 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவைக்காலமும், நன்மதிப்பும் கொண்ட முப்படைகளில் சேவையாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற 57 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதியிடமிருந்து இந்தப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார […]
பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாடுகளுக்கு அழைப்பு; வவுனியாவில் சம்பவம்!

வுனியா சமளங்குளம் பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு வெடுக்குநாறி மலைய மையப்படுத்தி 260ஏக்கர்கள் தொல்பொருளியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்டத்தின் சமளங்குளம் பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிப்பாடுகளை எதிர்வரும் காலத்தில் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியானது, அநுராதபுர காலத்தைச் சேர்ந்த பண்டைய பௌத்த வளாகத்தின் இடிபாடுகளைக் […]
சுன்னாகத்தில் பல வருடங்களாக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை ஒன்று களவாடப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை சுன்னாகப் பொலிஸார் நேற்று கைது […]