இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால் பலமான அரச சேவை இல்லாமையே – ஜனாதிபதி

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளின் தனித்துவமான சேவையைப் பாராட்டும் வகையிலான “விசிஷ்ட சேவா விபூஷண” (Vishishta Seva Vibhushana) பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. குறைந்தது 25 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவைக்காலமும், நன்மதிப்பும் கொண்ட முப்படைகளில் சேவையாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற 57 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதியிடமிருந்து இந்தப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார […]
பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாடுகளுக்கு அழைப்பு; வவுனியாவில் சம்பவம்!

வுனியா சமளங்குளம் பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு வெடுக்குநாறி மலைய மையப்படுத்தி 260ஏக்கர்கள் தொல்பொருளியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்டத்தின் சமளங்குளம் பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிப்பாடுகளை எதிர்வரும் காலத்தில் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியானது, அநுராதபுர காலத்தைச் சேர்ந்த பண்டைய பௌத்த வளாகத்தின் இடிபாடுகளைக் […]
சுன்னாகத்தில் பல வருடங்களாக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை ஒன்று களவாடப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை சுன்னாகப் பொலிஸார் நேற்று கைது […]
கடன் நிபந்தனைகளுக்காகவே கல்விச் சீர்திருத்தங்கள் – ஜோசப் ஸ்டாலின்
தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் மக்களின் அல்லது மாணவர்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படவில்லை என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறப்பட்ட கடன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் இவற்றை அவசர அவசரமாக நடைமுறைப்படுத்த முயல்கிறது என்று ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற அமைச்சரவை ஊடகச் சந்திப்பில் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த கல்வி அமைச்சரின் உரையைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு […]