முல்லையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை; 34 இறங்கு துறைகளையும், நாயாறு களப்பையும் எல்லைப்படுத்த முடிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் முல்லைத்தீவிலுள்ள 34கடற்றொழில் இறங்குதுறைகளையும், நாயாறு கடல் நீரேரியினையும் எல்லைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தில் 28.09.2026அன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளநிலையில், அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 41கடற்றொழில் இறங்குதுறைகளையும், கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல் ஆகிய […]

இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் விஜித ஹேரத்!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடருக்கு (UNGA81) இணையாக, இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான முக்கிய இருதரப்புச் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலை (Shisir Khanal) சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத், இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னுரிமை அம்சங்களை முன்னெடுத்துச் செல்வது, நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவது மற்றும் பொதுவான காலநிலை […]

“பெரும்பாலான வழக்குகள் 2015 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை” – பழைய வழக்குகள் ஏன் தொடரப்படுகின்றன என்பதை CIABOC பணிப்பாளர் நாயகம் விளக்குகிறார்

ஊழல் விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பான கவலைகள் குறித்து தெளிவுபடுத்திய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க, முக்கியமாக 2015 ஆம் ஆண்டுக்கு முந்தைய “பாரிய அளவிலான பழைய கோப்புகள்” மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) முன்னிலையில் உரையாற்றிய திசாநாயக்க, கடந்தகால […]

யார் யாருக்குத் தடை ஏற்படுத்தினர்? ரணிலின் பாதுகாப்பு அதிகாரி – கேமராமேன் சம்பவம் குறித்து விசாரணை கோருகிறது இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும், தொலைக்காட்சி கேமராமேன் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற சம்பவம் குறித்து உடனடியாக நியாயமான மற்றும் நடுநிலையான விசாரணையை நடத்துமாறு இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (SLWJA) கோரிக்கை விடுத்துள்ளது. அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு விசாரணையை அடுத்து, செப்டம்பர் 30 அன்று விக்கிரமசிங்க நீதிமன்றத்தை விட்டு வெளியேறியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் […]

இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள் குறித்து இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதிக வட்டி,கடனை திருப்பி செலுத்தும் நிபந்தனைகள் குறித்து பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளை தொடர்ந்து இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள் குறித்து இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல உடனடி கடன் சேவைகள் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன, மேலும் கையடக்க தொலைபேசி செயலிகள் மூலமும் தனிநபர்கள் இணையவழி கடன்களை பெற வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான கடன்களை வழங்கும் சில நிறுவனங்கள் கடன்களை பெற்றவர்கள் […]

அரவிந்த டி சில்வா பிணையாக வைப்பு செய்த பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

எயார்பஸ் மோசடி குறித்து இடம்பெற்றுவரும் விசாரணைகளில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவின் மனைவி நியோமாலி விஜயநாயக்கவிற்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிணையாக வைப்பு செய்த தொகையை பறிமுதல் செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியோமாலி விஜயநாயக்கவிற்க்கு வழங்கப்பட்ட பிணை தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. விஜேநாயக்க தலா 20 மில்லியன் ரூபாய் தொடர்பிலான இரண்டு பிணைகளின் அடிப்படையில் […]

24 மணி நேரமும் போதைப்பொருள் பற்றி அறிவிப்பதற்கான ‘1818’ அவசர சேவை!

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 என்ற அவசர அழைப்பு இலக்கம், தற்போது 24 மணிநேரமும் தடையின்றி இயங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசாரப் பிரிவு அறிவித்துள்ளது. ‘முழு நாடும் ஒன்றாக’ பிரதான அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சேவை மூலம் நாடு முழுவதிலும் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கை குறித்தும் […]

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் – ஐ.தே.க அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது, தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஒளிப்பதிவாளர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று (30) பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் தாக்குதலுக்கு இலக்கான குறித்த அதிகாரி, இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க நீதிமன்ற வளாகத்திற்கு வருகை […]

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்!

இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தை பொருத்தமட்டில் இரு தரப்பினரும் பல்வேறு துஷ்பிரயோகங்களை உடலாலும் உள்ளத்தாலும் அனுபவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாறவேண்டும் சிறுவர் மற்றும் முதியோருக்கு பாதுகாப்பான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி கொடுப்பது அனைவரினதும் கடமையாகும். முதியோர் தினத்தின் முக்கிய குறிப்புகள் தொடக்கம்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 இல் பிரகடனப்படுத்தப்பட்டு, முதல்முறையாக 1991 அக்டோபர் 1 அன்று அனுசரிக்கப்பட்டது. நோக்கம்: முதியவர்களின் […]

மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்

சமூக வலைத்தளங்களில் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பவர்கள், அத்தகைய செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். ஊவாபரணம – அலகொல்ல தோட்டத்தில் 13 ஆண்டுகளாக மண்சரிவு அபாய வலயத்தில் வாழ்ந்து வந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் பல தலைமுறைகளாக கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து, நாட்டின் பெருந்தோட்டத் துறையின் ஊடாக […]