சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய எங்களுக்கு எதிராக பொலிஸார் சோடிக்கப்பட்ட வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர் என வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர்தியாகாரசா நிரோஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ஜனநாயக ரீதியிலே சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக போராடி வந்த எங்களுக்கு எதிராக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த வழக்குகள் மீண்டும் தவணையிடப்பட்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
அடிப்படையில் எங்கள் மீது அதாவது ஒரு நியாயம் கோரி ஒரு சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக போராடிய எங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இவ்வாறான வழக்குகள் சோடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பொலிஸார் நீதிமன்றங்களிலே தாக்கல் செய்து எங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கட்டுப்பாடுகளை விதிப்பதும், அதேநேரத்திலே மக்களை அச்சங்கொள்ள வைப்பதும், ஒரு ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்துவதுமான செயல்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
அரசாங்கம் சொல்லுகின்றது ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு தடையில்லை என்று, ஆனால் செயற்பாட்டளவிலே இவ்வாறாக தனி நபர்களுக்குரிய, ஒரு பொது மக்களுக்குரிய நிலங்களிலே, தனியார் காணிகளிலே கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக அகிம்சை வழியிலே, அமைதியான முறையிலே, ஜனநாயக வழியிலே போராடிய எங்களை இன்றுவரை எங்களுக்கு எதிராக பல்வேறுபட்ட வழக்குகள் சோடிக்கப்பட்டு சோடிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.
இவ்வாறான ஒரு சூழ்நிலைதான் இங்கே நிலவுகின்றது. இவ்வாறான சூழ்நிலை முற்றாக நிறுத்தப்பட வேண்டும். மக்கள் அச்சச் சூழ்நிலைக்குள் வாழ வைக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றோம்