பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை வைத்தியரின் குடும்பம் வசிப்பதில் சிக்கல்?

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மனைவி பிரபோத்யா விஜேதுங்க மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த வைத்தியர் வாசீஹரன், அங்குள்ள பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். எனினும், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அண்மையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வைத்தியர் வாசீஹரனின் விசாவிலேயே அவரது குடும்பத்தினரும் பிரித்தானியாவில் தங்கியிருந்தனர். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவர்களது வதிவிட உரிமை கேள்விக்குறியாகியுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்குவதற்கு அவரது மனைவி பிரபோத்யா விடுத்த இரண்டு விண்ணப்பங்களும் பிரித்தானிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குடியுரிமை அந்தஸ்து இல்லாத காரணத்தால் பிரபோத்யாவால் அங்கு வேலை செய்ய முடியாமல் போயுள்ளதுடன், கடந்த ஒரு வருடமாகப் பாரிய நிதி நெருக்கடியையும் அவர் சந்தித்து வருகின்றார்.

இந்தக் குடும்பத்திற்கு இழைக்கப்படும் அநீதி குறித்து பிரித்தானிய மருத்துவச் சங்கம் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

“தனது வாழ்நாளை மற்றவர்களின் உயிரைக் காக்க அர்ப்பணித்த ஒரு வைத்தியரின் குடும்பத்தை இவ்வளவு தூரம் அலைக்கழிப்பது முறையல்ல” என பிரிட்டிஷ் வைத்திய சங்கத்தின் தலைவர் டொம் டொல்பின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் போது உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட விசேட தங்குமிட அனுமதி போன்ற நடைமுறைகள், இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பிரித்தானியாவிலேயே தங்கியிருக்க விரும்புவதாகப் பிரபோத்யா தெரிவித்துள்ளார். அத்துடன், தமது இனங்களுக்கு இடையிலான திருமணம் காரணமாக இலங்கைக்குத் திரும்பினால் சமூக மற்றும் கலாசார ரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், புலம்பெயர்ந்து பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களின் குடும்பப் பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்