ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி கைது!
களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து 01 கிலோகிராம் 36 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 190,000 ரூபாய் பணமும், ஒரு நவீன ரக கைபேசியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு; பாடசாலைகளை மூடத் தீர்மானமில்லை!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முதலாம் பாடசாலை தவணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியுடன் […]
இரத்தினபுரி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!
ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பயணிகள் பஸ் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், அதிலிருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்து ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து […]
எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை எக்காரணம் கொண்டும் உயர்த்த வேண்டாம் என அகில இலங்கை ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (22) கொழும்பில் இடம்பெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை உயர்வு என்பது தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஒரு நெருக்கடியாகும். […]
பொன்கொரண்டி தாவரத்துடன் சீனப் பயணி ஒருவர் கைது

25 கிலோ கிராம் பொன்கொரண்டி மூலிகைத் தாவரத்தை சட்டவிரோதமாகச் சீனாவுக்குக் கடத்த முயன்ற 37 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றைய தினம் அதிகாலை 12.10 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து ஷங்காய் நோக்கிப் புறப்படவிருந்த ‘சீனா ஈஸ்டர்ன்’ நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6018 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையம் வந்திருந்தார். இதன்போது, அவரது நடத்தையில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டனர். […]
தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரும் மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மஜ்தல் செல்ம் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ரத்வான் படையணியின் தளபதியாகக் கருதப்படும் அபு கலீல் பர்ஜி கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் மேலும் இரண்டு ஹிஸ்புல்லா உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தெற்கு லெபனானின் பல பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்புகள் எனத் தாங்கள் கருதும் இடங்கள் மீது […]
எரிபொருள் நெருக்கடி; தபால் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் திணைக்களத்தின் கடிதப் போக்குவரத்து சேவைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத் தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். இதன்படி, தபால் நிர்வாகத்தினால் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் வருமாறு, நாடு முழுவதுமுள்ள தபால் பரிமாற்றங்கள் […]
பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் கடுமையான போர் மூண்டுள்ளது. இந்தச் சூழலில் ஒருவேளை […]
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை கொலை தொடர்பில் வௌியான பல தகவல்கள்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சந்தேகநபர்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைதானவர்கள் மட்டக்களப்பில் நடைபெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மூன்று வயது குழந்தையுடன் இளம் தாய் ஒருவர் சென்றிருந்த நிலையில் காணாமல் போனார். […]
ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும்!

அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கை ஈரான் ஊடகங்களில் தற்போது வௌியாகியுள்ளது. முன்னதாக, 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். அதற்கு பதில் வழங்கும் வகையிலேயே ஈரான் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.