ஊரெழுவில் பதுக்கி வைத்த எரிபொருள் மீட்பு

யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான எரிபொருட்கள், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 4,700 லீற்றர் டீசல், 800 லீற்றர் பெற்றோல் மற்றும் 400 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ஊரெழுவிலுள்ள தனியார் […]

செம்பியன்பற்று வடக்கு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் நேற்று (21) மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் வீட்டில் வசித்து வந்த நபர் கடந்த சில நாட்களாக வெளியே நடமாடாததை கவனித்த அப்பகுதி மக்கள், அவரது உறவினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது, அங்கு அவர் சடலமாக இருப்பதை அவதானித்து மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். செம்பியன்பற்று வடக்கு பகுதியை சேர்ந்த […]

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி; தென்னாபிரிக்கா வெற்றி

நியூசிலாந்துக்கெதிரான நான்காவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா: 164/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கோனர் எஸ்டெர்ஹுய்ஸென் 57 (36), ருபின் ஹெர்மன் ஆ.இ 28 (25), டொனி டி ஸொர்ஸி 23 (21), டியன் பொரெஸ்டர் 19 (14), ஜேஸன் ஸ்மித் 19 (14), ஜோர்ஜ் லின்டி ஆ.இ 14 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 2/29 [4], பென் சியர்ஸ் […]

எரிபொருள் விலையேற்றம்; பேக்கரிப் பொருட்கள் விலை குறித்த பேச்சுக்கள்…

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நிலவும் சவால்களைக் கருத்திற்கொண்டு, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் நாளை  எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு பேக்கரி தொழில்துறையில் பல சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக விலைத் திருத்தம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, அனைத்து வகையான பேக்கரி பொருட்களுக்கான திருத்தப்பட்ட புதிய விலைகள் அறிவிக்கப்படும் […]

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை கனடா இராஜதந்திர ரீதியில் கையாளத் திட்டம்?

சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சட்டவிரோதமாக முடக்கியுள்ளதற்குக் கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து கனேடிய அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை (22) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்யத் தாங்கள் […]

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை வைத்தியரின் குடும்பம் வசிப்பதில் சிக்கல்?

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மனைவி பிரபோத்யா விஜேதுங்க மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த வைத்தியர் வாசீஹரன், அங்குள்ள பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். எனினும், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அண்மையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வைத்தியர் வாசீஹரனின் […]

ஹவாய் தீவில் கடும் வெள்ளப்பெருக்கு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் நிலவும் கடும் சூறாவளி மற்றும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹவாய் தீவை தாக்கியுள்ள “கோனா லோ” எனப்படும் புயலால் கடந்த 10 நாட்களில் சில பகுதிகளில் 127 சென்றி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், […]

பிரித்தானியாவின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலில் நிலைநிறுத்தம்!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரித்தானிய இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரித்தானியப் பிரதமர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த நகர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான ‘HMS ஆன்சன்’ என்ற இந்த நீர்மூழ்கிக் கப்பல், கடந்த மார்ச் 06 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் […]

படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடலுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து […]

பூநகரியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பூநகரி, சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார் தமது பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் வேலியில் சிக்கியதாலேயே அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கிய குறித்த நபர் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் சென்மன்குண்டு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.