எரிபொருள் விலையேற்றம்; கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. தாமதக் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில், கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 350% முதல் 400% வரையான அளவில் […]

அரசாங்கம் அவசர வேண்டுகோள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை […]

வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை திறக்க 22 நாடுகள் கூட்டறிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 28-ஆம் திகதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தை அடைந்துள்ளது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும், இஸ்ரேலும், தொடர்ந்து அந்த நாட்டை தாக்கி வருக்கின்றன. இதனால் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் நிர் மூலமாக்கப்பட்டு உள்ளன. இந்தபோரில் தங்கள் அதி உயர் தலைவரை முதல் நாளிலும், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல தலைவர்களையும் […]

மாலை 6 மணி முதல் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு

இன்று (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பேருந்து கட்டணத் திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கட்டணத் திருத்தம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்குச் சென்ற போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பலத்த மின்னல் எச்சரிக்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (22) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மழையுடன் […]

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

படோவிட்ட பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படோவிட்ட பொலிஸ் சோதனைச் சாவடி உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, ஒரு கிலோ 24 கிராம் ஹேஷ் ரக போதைப்பொருளைத் தம் வசம் வைத்திருந்த நிலையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 22 வயதுடையவர் எனவும், அவர் கல்கிசை பகுதியைச் […]

த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது!

திமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகம் ஒரு அச்சுறுத்தலாக நினைக்கின்றார்கள். அதன் விளைவு தான் த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட திமுக கட்சி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜீ தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் […]

தமிழகத்தில் மார்ச் 26 வரை அதிகபட்ச வெப்பநிலை

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா முதல் தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (மார்ச் 23), நாளை மறுதினமும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான […]

திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகல்

சென்னை: திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தவாக தலைவர் வேல்முருகன், “2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணியில் பயணித்து வந்தோம். இந்தச் சூழலில் திமுக பேச்சு வார்த்தைக்குழுவுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். அதில் எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நாங்கள் ஒரு இடத்தை எங்களால் […]

தமிழகத்தில் 897.82 கோடி விடியல் பயணங்கள் – முதல்வர் ஸ்டாலின்

விடியல் பயணம் புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து எனவும், திராவிட மாடலில் 7,712 விடியல் பேருந்துகள் மூலம் மொத்தம் 897.82 கோடி விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விடியல் பயணம் புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து. திராவிட மாடலில் 7,712 விடியல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மார்ச் 1 வரையில், 2021-22 – 95.86 கோடி, 2022-23 – 166.53 கோடி, 2023-24 – […]