பாரிஸ் ஃபேஷன் வீக்கில் ஒன்டாரியோ மாகாணத்தின் முதல் திருநங்கை!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள குவெல்ஃப் நகரத்தைச் சேர்ந்த ஒரு மொடல், பாரிஸ் ஃபேஷன் வீக்கில் சானல் எக்ஸ்க்ளூசிவ் ரன்வேயில் நடந்து சென்ற முதல் திருநங்கை நபராக சாதனை படைத்துள்ளார். குவெல்ஃப் நகரத்தைச் சேர்ந்த 24 வயதான டால்டன் டுபுவா, சமீபத்திய பாரிஸ் ஃபேஷன் வீக்கில் சானல் எக்ஸ்க்ளூசிவ் ரன்வேயில் நடந்து சென்ற முதல் திருநங்கை மொடலாக சாதனை படைத்தார். கொரோனா காலத்தில் குவெல்ஃப் நகரில் பள்ளியை விட்டு விலகிய பிறகு, டுபுவா மொடலிங் துறையில் ஈடுபடத்தொடங்கினார். […]

ஈரான் புரட்சி; கனடாவில் 1979ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமகால நிகழ்வை நினைவுபடுத்திய செய்திகள்

ஈரானில் ஏற்பட்ட கலக்கம், உலக எண்ணெய் சந்தைகளில் பெரிய பாதிப்பு, கனடாவிலும் அதன் அப்பாற்பட்ட பகுதிகளிலும் வானளாவிய பெட்ரோல் விலைகள்—2026 இல் வாகன ஓட்டிகளையும் அரசுகளையும் பாதித்து வரும் பிரச்சினைகள், 1979 இலும் ஏற்பட்டன; அவற்றுக்கு காரணமாக இருந்தது ஈரான் புரட்சி என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்போது, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி, உலகம் முழுவதும் நுகர்வோரிடம் பதற்றமான வாங்குதல் மற்றும் எரிபொருள் குவித்தல் போன்ற செயல்களை தூண்டி, எண்ணெய் தேவையை அதிகரித்தது. […]

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதனடிப்படையில் மதிப்பிடப்பட்டது?

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் விசாரணைகளை இன்னமும் முடிவுறுத்தவில்லை. அவ்வாறிருக்கையில் நீதியமைச்சரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட எண்ணிக்கை எதனடிப்படையில் மதிப்பிடப்பட்டது? என சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கேள்வி எழுப்பியுள்ளார். வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பில் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ‘இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல்போனோர் […]

இந்து சமுத்திரப்பிராந்திய நாடுகளின் நிலப்பரப்பை வெளிநாட்டு சக்திகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன?

தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய நாடுகளைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு சக்திகள் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்துவது குறித்து நிலவும் கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என்பது தான் முக்கிய பிரச்சினையாக இருப்பதாக வொஷிங்டனை தளமாகக்கொண்டு இயங்கிவரும் இந்து சமுத்திரப்பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர் நிலாந்தி சமரநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ‘ஈரான் கப்பல் விவகாரத்தில் மூன்று கப்பல்கள் நாட்டுக்கு […]

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தன் கட்சிக்குள் நடப்பவை புரியவில்லை

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு, சொந்தக் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதுதான் புரியவில்லை எனப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (20.03.2026) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், உலக விவகாரங்களைப் பேசும் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தனது கட்சிக்குள் நிலவும் உட்பூசல்கள் மற்றும் குழுக்கள் உருவாவது குறித்துப் புரியவில்லை. ரணில் விக்ரமசிங்க அவருக்குச் செய்யப்போகும் காரியம் குறித்தோ, தற்போது பின்னப்படும் […]

சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது – அலி சப்ரி

சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை தனது இறையாண்மையையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்காக சமநிலை, நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஈரானியக் கப்பல் மற்றும் அமெரிக்க விமான விவகாரத்தில் ஜனாதிபதியின் தீர்மானத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ‘ஈரான் கப்பல் விவகாரத்தில் மூன்று கப்பல்கள் நாட்டுக்கு நல்லெண்ண விஜயத்தை […]

சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை அதிரடியாக அதிகரித்துள்ளன. சினோபெக் நிறுவனத்தின் புதிய விலை மாற்றங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 பெற்றோல்: ஒரு லீற்றரின் விலை 122 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை – 487 ரூபா) சுப்பர் டீசல்: ஒரு லீற்றரின் விலை 219 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை […]

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

பெற்றோல் விலை அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு, முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. இந்த விலை அதிகரிப்பானது எமது […]

மக்களின் தலையில் சுமையைத் திணித்துவிட்டு ராஜபக்ஷக்கள் மீது சேறு பூசிக்கொண்டிருக்கிறது அரசாங்கம் – நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக் கொண்டிருந்தால், அடுத்த ஜென்மத்திலும் அந்தத் தொகையை ஈடுகட்ட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகச் சந்தை விலையை விட 45 டொலர்கள் அதிக […]

சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதம் வெளியீடு!

சூர்யா நடிப்பில் உருவாகி பல்வேறு தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்ட ‘கருப்பு’ திரைப்படம் – எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இயக்குநரும், நடிகருமான ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கருப்பு’ படத்தில் சூர்யா முதன்மையான வேடத்தில் நடிக்க அவருடன் திரிஷா , நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் , சுவாசிகா‌, ஷிவதா ,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]