விஜய் எங்கு போட்டியிட்டால் எனக்கென்ன? – கமல்ஹாசன்

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல் ஹாசன் அளித்த பதில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் விஜய் ரசிகர்களோ கமலை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். கமல் பதில்: அரசியல் கட்சி நடத்தி வரும் விஜய் வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் முதல் முறையாக போட்டியிடும் இந்த தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்வார் விஜய் என்று அவரின் ரசிகர்கள் கூறி […]
‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்திள் ‘தங்கரத்தினமே..’ வெளியீடு!

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரமாக திரையில் தோன்றும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘தங்கரத்தினமே..’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ் ,கௌசல்யா, மைம் கோபி, வை. ஜி. மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், சுதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. […]
பரத் – அஜய் கார்த்தி இணைந்து நடிக்கும் ‘காளிதாஸ் 2’படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சந்தை மதிப்புள்ள நடிகர் பரத் மற்றும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி ஆகியோர் இணைந்து முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்தி, பவானி ஸ்ரீ, சங்கீதா, அபர்னதி, ஆனந்த் நாக் , டி எம் கார்த்திக், ‘சிங்கம்’ ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் பாலா […]
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவாவின் முதல் முதலாய்’ பாடல்

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ எனும் பெயரில் வெளியான சுயாதீன இசை அல்ப பாடலில் தோன்றி, நடனமாடி தனது கலை பயணத்தை தொடங்கியிருக்கிறார். இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான ரவிச்சந்திரன் இசையில் பின்னணி பாடகர் ஜீ. வி பிரகாஷ் குமார் பாடியிருக்கும் ‘முதல் முதலாய் ‘எனத் தொடங்கும் பாடலுக்கு ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள். மெலோடியும் , றாப் இசையும் கலந்த இந்த பாடலை இசை கலைஞர் ஆதித்யா றாப் […]
இலங்கைக்கு மார்ச் 25 இல் 37இ000 மெற்றிக் தொன் டீசல் கப்பல் வருகிறது!

சுமார் 37,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மார்ச் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் 37,000 மெற்றிக் தொன் […]
இலங்கையில் சட்டம் என்பது விசாரணை அதிகாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது!

இலங்கையில் சட்டம் என்பது தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, “சட்டம் என்பது ஆசைகளினால் பாதிக்கப்படாத தூய பகுத்தறிவு என வரையறுக்கப்பட்டாலும், இலங்கையில் விசாரணை அதிகாரிகள் தங்களது அரசியல் அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காகச் சட்டத்தைத் தவறாகப் […]
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாண எப்ஸ்டீன் மாளிகையில் விசாரணை

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஜெப்ரி எப்ஸ்டீனின் மாளிகையில் நடைபெற்று வரும் விரிவான தேடுதல் வேட்டை, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், அவர் உலகளாவிய அரசியல் தலைவர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுடன் கொண்டிருந்த இரகசியத் தொடர்புகள் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட இரகசிய ஆவணங்களின் அடிப்படையில், நியூ மெக்ஸிகோ மாகாண அரசு ஒரு சிறப்பு ‘உண்மை கண்டறியும் […]
ஒரே நாளில் ஈரானின் 17 மாகாணங்கள் மீது 640 தாக்குதல்கள்

ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களைக் கொண்ட செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் சிறுவர்களா, பொதுமக்கள் அல்லது இராணுவத்தினரா என்பது குறித்த வகைப்படுத்தல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் ஆரம்பமாகி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், […]
இந்தியாவில் நில நடுக்கம்
இந்தியாவின் சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று(21.03.2026) இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8.46 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 4.1 ஆக இந்த நில அதிர்வு பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, 27.556 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.576 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து […]
அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு விடவும், வாக்கெடுப்பு நடத்தவும் சபாநாயகர் தீர்மானித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு, வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் முறையற்ற திட்டமிடல்களே பிரதான காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தன. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கும் எதிர்க்கட்சிகள் நடவடிக்கைகளை எடுத்திருந்தன. இதையடுத்தே, அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். […]