விழுப்புரம்:
அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விசிக பொதுக்கூட்டம்:
திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு, ரவிக்குமார் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய வன்னி அரசு, “திண்டிவனத்தைத் திண்டிவளம் என மாற்றுவோம். கட்சி தொடங்கியது முதலே தமிழ் தேசியம் மற்றும் விடுதலையே எங்கள் உயிர் மூச்சு,” என்றார்.
பாமக குறித்து நிலைப்பாடு:
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம். பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என்பதுதான் பிரகடனம். எனக்கு அமைச்சர் பதவியை விட எங்கள் தலைவரும் போராட்டமுமே முக்கியம். விசிக தேர்தலுக்கான சராசரி கட்சியல்ல; இது ஒரு விடுதலைக்கான இயக்கம். பிரபாகரன் பெயரை வைத்துப் போலித் தமிழ் தேசியவாதிகள் பிழைப்பு நடத்துகிறார்கள்,” எனக் கடுமையாக விமர்சித்தார்.
#VanniArasu #VCK #PMK #TVKAlliance #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive