பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சுமார் 18 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் சனிக்கிழமை பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள காவல் துறை சோதனைச் சாவடி மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட டிராக்டரை கொண்டு மோதி, தீவிரவாதி குண்டுகளை வெடிக்க செய்துள்ளார். இதற்கு தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத படை காரணம் என தெரியவந்துள்ளது.

கைபர் பக்துன்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தின் எல்லைப் பகுதியில் தீவிரவாதியின் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கைபர் பக்துன்வாவின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள தாராஸிந்தா தாலுக்காவில் அமைந்துள்ள அமன் மேலா காவல் சோதனைச் சாவடியில் குண்டு வெடித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் பெண்கள், 2 பேர் சிறுவர்கள், 2 அரசு அதிகாரிகள் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த 18 பேர் மாவட்ட தலைநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் வெடிகுண்டு செயலிழப்பு படைப் பிரிவினர் வெடித்த குண்டின் தன்மை குறித்து அறிய ஆய்வு செய்து வருகின்றனர். அந்தப் பகுதி தற்போது பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

கடந்த 2022-ல் பாகிஸ்தான் மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத படையினர் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கைபர் பக்துன்வாவில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

xon

கொங்கோவில் விமானம் விபத்து: 16 பேர் உயிரிழந்ததாக தகவல்?

September 27, 2026

ஜனநாயகக் குடியரசு கொங்கோவின் கெங்கே பகுதியில் TRACEP நிறுவனத்துக்குச் சொந்தமான Let L-410 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த

purg

பள்ளிகளில் புர்காவுக்கு தடை?

September 27, 2026

இத்தாலி​யில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலை​மை​யில் அமைச்​சரவை கூட்​டம் நேற்​று​முன்​தினம் நடை​பெற்​றது. இக்கூட்டத்​தில், இத்​தாலி​யில் பள்​ளி​களில் புர்கா மற்​றும் நிகாப்

pa

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு

September 27, 2026

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ir

ஈரான் – அமெரிக்கா: நவம்பரில் மீண்டும் போர் மூளும்

September 27, 2026

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர்

1200-675-25121187-thumbnail-16x9-admk-aspera

“திமுக கொரோனா; உருமாறிய கொரோனா தவெக!” – தவெகவை திமுகவின் ‘பி’ டீம் என ஆவேசமாக விமர்சித்த இன்பதுரை எம்.பி!

September 27, 2026

செங்கல்பட்டு: திமுகவின் ‘பி’ டீம் தான் தவெக என்றும், திமுக கொரோனா; உருமாறிய கொரோனா தவெக எனவும் அதிமுக எம்.பி.

koh

டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

September 27, 2026

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்து சாதனை

kon

‘மண்ட வெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

September 27, 2026

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையான கோமலீ பிரசாத் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மண்ட வெட்டி’ திரைப்படத்தில் இடம்பெறும்

ctr-nirmal-kumar (2)

“ஜெம் வீரமணி வழக்கை முடிக்க பல நூறு கோடி பேரம்; திமுக, அதிமுகவில் விசுவாசிகள் இல்லை!” – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

September 27, 2026

மதுரை: ஜெம் வீரமணி வழக்கை முடிக்க முந்தைய திமுக ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் பேரம் நடைபெற்றதாக அமைச்சர்

dailythanthi_2026-09-27_du1t0jm4_sami33

“2021 தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்தான் விஜய்; அதிமுகவே தவெகவை விழுங்கும்!” – எடப்பாடி பழனிசாமி சரமாரி விமர்சனம்!

September 27, 2026

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தவெக அரசையும் முதலமைச்சர்

snmu

நடிகர் சரண் நடிக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் ‘

September 27, 2026

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சரண் கதையின் நாயகனாக நடிக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற

da

தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா

September 27, 2026

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா மதுரையில் சிறப்பாக

sulo

‘சிக்மா’ – ‘சுலோச்சனா’ பாடல் வெளியீடு!

September 27, 2026

நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுலோச்சனா’ எனும் பாடலும், பாடலுக்கான