பத்தரமுல்லையில் ஜனாதிபதி தலைமையில் 15ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம்

இலங்கையில் நிலவிய முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட உயிர்நீத்த இராணுவ வீரர்களை கௌரவிக்கும் 15ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம், இன்று செவ்வாய்க்கிழமை (19) பத்தரமுல்லையில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு அருகில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இம்முறை நிகழ்வுகளில் ஒரு விசேட மாற்றமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளுடன் இணைந்து பணியாற்றி உயிர்நீத்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாவீரர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதியுடன் இணைந்து அஞ்சலி செலுத்துவதற்கு விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தமது உயிரைத் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு தேசத்தின் கௌரவத்தைச் செலுத்தும் முகமாக ஆண்டுதோறும் மே 19 ஆம் திகதி தேசிய மாவீரர்கள் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் இம்முறை 15 ஆவது முறையாக இந்நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்முறை நிகழ்வில் சில விசேட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாய்நாட்டிற்காக உயிர்நீத்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த நிகழ்வில் அதிக வாய்ப்புகளை வழங்குவதே பிரதான நோக்கமாகும். எனவே, முன்னைய ஆண்டுகளை விட அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மற்றொரு முக்கிய விடயமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து முப்படைகளுடன் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாவீரர்களின் உறவினர்களுக்கு இம்முறை விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 க்கும் மேற்பட்ட இத்தகைய குடும்பங்கள் விசேடமாகத் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து தமது உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் கௌரவம் அளிக்கவும் விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாலை 3 மணிக்கு இந்த நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளதுடன், விசேட அதிதிகள் மாலை 3:15 மணிக்குள் வருகை தரவுள்ளனர். தரைப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் என மொத்தம் 2,769 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

மாவீரர்களின் பெற்றோரைப் பொறுத்தவரை, இம்முறை சுமார் 160 பேருக்குப் பிரதான நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை நிகழ்வின் போது ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் விசேட அதிதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போது, அந்தந்தப் படைகளைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோரும் உறவினர்களும் அவர்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என