மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை நாம் நிச்சயம் தடுப்போம்” – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சுதந்திரமான தேசத்தின் பெருமைக்காகத் தங்களது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து மாவீரர்களினதும் எதிர்பார்ப்புகளைத் தனது தோள்களில் சுமந்துள்ள தற்போதைய அரசாங்கம், அமைதி மற்றும் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரியான நாட்டைக்கட்டியெழுப்புவதற்கு உறுதியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எல்லையற்ற அன்பு, அஹிம்சை மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதான கருணையை மையமாகக் கொண்ட பௌத்த தர்மத்தினால் பல நூற்றாண்டுகளாக வழிநடத்தப்பட்டு வரும் இலங்கை, மனிதநேயம் இனப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு ஓங்கி நிற்கும் ஒரு […]
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத அளவிற்குப் பாரியளவில் குறைத்து, அதனைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த பாராட்டுச் சான்றிதழ், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 79 ஆவது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தொடரில் வைத்து இலங்கையிடம் இன்று (19) கையளிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தரநிலைகள் மற்றும் உலகளாவிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, […]
ஒன்ராறியோவில் காணாமல் போன சிறுவன் சஸ்காச்சுவானில் சடலமாக மீட்பு: கொலை வழக்காக காவல்துறை விசாரணை

கடந்த ஓராண்டிற்கு முன்னர் வடக்கு சஸ்காச்சுவான் (Saskatchewan) பகுதியில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட ஒன்ராறியோவைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இச்சம்பவத்தை ஒரு கொலை வழக்காகக் கருதி ஆர்.சி.எம்.பி (RCMP) காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. ஒன்ராறியோவின் பிராம்ப்டன் (Brampton) நகரைச் சேர்ந்த 16 வயதான ஜேசியா வெப்-லாங் (Jay’siiah Webb-Long), கடந்த 2025 ஆம் ஆண்டு மே 16 அன்று இறுதியாகத் தனது குடும்பத்தினருடன் பேசியிருந்தான். ஆர்.சி.எம்.பி விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, சஸ்காடூன் […]
வொன் (Vaughan) நகரில் உள்ள வீடொன்றில் லம்போர்கினி கார் திருட்டு: சந்தேகநபர்களைத் தேடும் காவல்துறை

கடந்த வாரம் வொன் (Vaughan) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து லம்போர்கினி (Lamborghini) கார் திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஐந்து சந்தேகநபர்களை காவல்துறை தேடி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4:45 மணியளவில், ஸ்டோர்மண்ட் ட்ரெயில் (Stormont Trail) மற்றும் கார்லிங் வீதிக்கு (Carling Road) அருகிலுள்ள வீடொன்றிற்குள் நான்கு சந்தேகநபர்கள் பலவந்தமாக நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த வீட்டு உரிமையாளர்களை எழுப்பிய இக்கும்பலினர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம், நகைகள் மற்றும் அவர்களின் லம்போர்கினி காரின் சாவியைக் […]
யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் மகிந்த ஏன் புறக்கணிக்கப்பட்டார்? – அரச தரப்பு விளக்கம்

போர் வீரர்கள் தின விழாவிற்கு எந்தவொரு அரசியல் பிரமுகர்களும் அழைக்கப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்று(19.05.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய போர் வீரர்கள் தினம் கொண்டாட்டங்களுகு்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏன் அழைக்கப்படவில்லை என கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜித்த ஹேரத், “ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வத்தகல மற்றும் முப்படைகளும் […]
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக, வரும் மே 23 ஆம் திகதி முதல் ஜூன் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சீனாவுக்குப் […]
வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை – என்.எம். ஆலம்

வட மாகாணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலை மற்றும் படகுகளுக்குமான இழப்பீடுகள் வழங்குதல் மற்றும் அதன் சேதாரங்களை சரிசெய்வதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (19) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாங்கள் இந்த ஊடகம் வாயிலாக சில விடயங்களை வெளிக்கொண்டுவர விரும்புகின்றோம். குறிப்பாக, புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் அல்லது சேதமாக்கப்பட்ட […]
எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு பிரிவினைவாதத்துக்கும் இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாதிருப்பதே எனது அரசாங்கத்தின் இலக்காகும். இரத்த வெள்ளத்தினாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது, அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். செவ்வாய்கிழமை (19) இடம்பெற்ற 17ஆவது தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் […]
இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகே இரகசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம் முற்றுகை; வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இரகசியமாக இயங்கி வந்த சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு மையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். தொலைத்தொடர்பு அதிகாரிகளின் உதவியுடன் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட இந்த முற்றுகையின் போது, மாலைதீவு பிரஜை ஒருவர் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திடிய (Attidiya) பகுதியில் பயண முகவர் நிறுவனம் (travel company) என்ற போர்வையில் இந்த மையம் இரகசியமாக இயங்கி […]
நேரடியாக உருளைக்கிழங்குகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் மூலம் நேரடியாக உருளைக்கிழங்குகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, அந்த உருளைக்கிழங்குத் தொகைகளை லங்கா சதொச நிறுவனத்திடம் ஒப்படைத்து, அதன் சில்லறை விற்பனை வலையமைப்பின் ஊடாக நுகர்வோருக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தினால் தற்போது இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது ஒரு கிலோகிராமுக்கு 80 ரூபாய் விசேட வர்த்தகப் பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள […]