கடந்த வாரம் வொன் (Vaughan) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து லம்போர்கினி (Lamborghini) கார் திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஐந்து சந்தேகநபர்களை காவல்துறை தேடி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4:45 மணியளவில், ஸ்டோர்மண்ட் ட்ரெயில் (Stormont Trail) மற்றும் கார்லிங் வீதிக்கு (Carling Road) அருகிலுள்ள வீடொன்றிற்குள் நான்கு சந்தேகநபர்கள் பலவந்தமாக நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்த வீட்டு உரிமையாளர்களை எழுப்பிய இக்கும்பலினர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம், நகைகள் மற்றும் அவர்களின் லம்போர்கினி காரின் சாவியைக் கேட்டு மிரட்டியுள்ளதாக யோர்க் பிராந்திய காவல்துறை (York Regional Police) தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களில் நால்வர் பாதிக்கப்பட்டவரின் காரில் தப்பிச் சென்றுள்ளதோடு, ஐந்தாவது சந்தேகநபர் ஓட்டி வந்த கறுப்பு நிற செடான் (sedan) ரக காரிலும் அவர்கள் இணைந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், தங்களை அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பை ரகசியமான முறையில் தொடர்புகொள்ளுமாறு புலனாய்வாளர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.