சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிரந்தர முதல்வர் விஜய்:
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “நம்முடைய முதலமைச்சரின் ஆட்சி இன்னும் 25 ஆண்டுகளுக்கு இருக்கும். நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார். சுத்தமான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதே அவருடைய கனவு. அந்தக் கனவை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
கிராமங்களில் அடிப்படை வசதிகள்:
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள 12,147 கிராமங்கள் அனைத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து டிரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.
#MinisterNAnand #CMVijay #RuralDevelopment #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive