கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்பு; 1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, வசதிகளை வழங்குவதாகும் என்றும், இதன்போது கிராமத்திற்கும் நகருக்கும் இடையில் மிக மேம்பட்ட வீதித் கட்டமைப்பு, சிறந்த தொடர்பாடல் கட்டமைப்பு, செயற்திறனான மற்றும் வலுவான அரச சேவையை ஸ்தாபிப்பதே எமது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் […]
இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப்

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்ருத் சமூக ஊடகத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் ஈரான் மீதான தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி – சந்திரசேகர்
கச்சத்தீவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கச்சத்தீவு கடற் […]
செம்மணி 582 மனித எச்சங்கள்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன சொல்லியுள்ளது?

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை மற்றும் சர்வதேச தடயவியல் உதவி ஆகியவை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளது? உள்ளக பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் சர்வதேச அரங்கில் குறிப்பிடுகிறது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வாறு நீதி கிடைக்கும். பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் […]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே ராஜபக்ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை: – பொதுஜன பெரமுன

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் ராஜபக்ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை. அவ்வாறிருக்கையில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக மாத்திரம் 2029ஆம் ஆண்டில் மீண்டும் ராஜபக்ஷ ஆட்சியை இந்த நாட்டுக்கு கொண்டுவருவதை எவராலும் தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று (8) ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது ராஜபக்ஷ குடும்பத்தைச் […]