இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகே இரகசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம் முற்றுகை; வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இரகசியமாக இயங்கி வந்த சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு மையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு அதிகாரிகளின் உதவியுடன் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட இந்த முற்றுகையின் போது, மாலைதீவு பிரஜை ஒருவர் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்திடிய (Attidiya) பகுதியில் பயண முகவர் நிறுவனம் (travel company) என்ற போர்வையில் இந்த மையம் இரகசியமாக இயங்கி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாட்டிலைட் ரிசீவர்கள் (satellite receivers), செயற்கைக்கோள் தட்டுகள் (satellite dishes), கணினிகள், ஸ்டார்லிங்க் (Starlink) சாதனம் மற்றும் பிற ஒலிபரப்பு உபகரணங்கள் உட்பட சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் தரவுகளைப் பயன்படுத்தி, செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பதிவிறக்கம் செய்து, பின்னர் இந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்