காத்தான்குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய பட்டதாரி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரம், சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் இவர் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான வேலை இன்மை காரணமாக பகுதி நேரமாக கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.