நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் (Dr. Harshana Suriyapperuma) குடியுரிமை நிலை குறித்து கேள்வியெழுப்பி, “தினன தகுண” (Dinana Dakuna) அமைப்பு ஐந்து வினாக்கள் அடங்கிய கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக செயலாளரிடமிருந்து நேரடியான மற்றும் ஆதாரபூர்வமான பதில்களை எதிர்பார்ப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களை அவர்கள் கோரியுள்ளனர்:
-
அவர் அவுஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்ட சரியான திகதி எது?
-
அவர் அந்தக் குடியுரிமையைத் துறந்திருந்தால், அது துறக்கப்பட்ட சரியான திகதி எது?
-
அவுஸ்திரேலியக் குடியுரிமையைத் துறந்த பின்னர், எந்தத் திகதியில் தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் அவர் மீண்டும் இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டார்?
-
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட போது, அவுஸ்திரேலியக் குடியுரிமையை உத்தியோகபூர்வமாகத் துறந்திருந்தாரா அல்லது அதற்கான விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பித்திருந்தாரா?
-
தற்போது பகிரங்கமாகப் பேசப்படும் 03.02.2010 திகதியிடப்பட்ட C19090060828 என்ற இலக்கம், அவரது அவுஸ்திரேலியக் குடியுரிமையுடன் தொடர்புடையதா அல்லது அது தவறான தகவலா?
இந்த விடயம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள “தினன தகுண” அமைப்பு, நிதி அமைச்சின் செயலாளர் இது குறித்து ஆதாரங்களுடன் கூடிய விரைவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.