குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இத் தொகுதி இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 48 மணித்தியாலங்களில் படிப்படியாக வலுவிழக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்தாக்கம் காரணமாக, அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமும் மழை நிலைமையும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த

den

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

July 27, 2026

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும்

sajith-2

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

July 27, 2026

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

arrest

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

July 27, 2026

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது

cru oil

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

July 27, 2026

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க