சர்ச்சைக்குரிய ‘கிறிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை இடைநிறுத்தும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமா என்பது குறித்த தனது உத்தரவை நவம்பர் 18ஆம் திகதி வழங்குவதாகக் கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.