தெலுங்கு நடிகர் திரு வீர் மற்றும் ‘மக்கள் செல்வி’ ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து கதையின் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஓ.. சுகுமாரி’ படத்தின் புதிய தகவலை படக் குழுவினர் பிரத்தேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓ.. சுகுமாரி’ திரைப்படத்தில் திரு வீர் ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஜான்சி, ஆம்னி, கெவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சி ஹெச் குசேந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் மஞ்சு ராஜு இசையமைத்திருக்கிறார். ரூரல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வர் ரெட்டி தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதன்மையான பணியான பின்னணி பேசும் பணியில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அதற்குரிய பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.