தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சரண் கதையின் நாயகனாக நடிக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தாமரை ‘ எனும் முதல் பாடலும் ,பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் த. சமயமுரளி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ திரைப்படத்தில் சரண், ஜே டி சக்கரவர்த்தி, லால், ஸ்மீகா, ராதிகா சரத்குமார், சாதிக், காளி வெங்கட், பாலசரவணன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
க. வின். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் டேனியல் இசையமைத்திருக்கிறார்.
கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை எஸ். ஆர். ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராம் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.
படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தில் இடம் பிடித்த ‘தாமரை பூமுகம் வான் மழை உன் மனம்..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் த. சமயமுரளி எழுத, பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல் மெல்லிசையாகவும் காதல் உணர்வை விவரிப்பதாலும், இசை ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.