தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – சிறந்த தமிழ் படமாக ‘ராயன்’ தேர்வு

சென்னை:

72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியத் திரையுலகின் மிக உயரிய இந்த விருதுகளுக்கான தேர்வில், தமிழகப் படங்கள் மற்றும் கலைஞர்கள் பல விருதுகளைக் கைப்பற்றி மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை தனுஷ் இயக்கி நடித்த ’ராயன்’ திரைப்படம் பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம், சிறந்த இயக்குநர் (ராஜ்குமார் பெரியசாமி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ்) மற்றும் சிறந்த படத்தொகுப்பு (கலைவண்ணன்) என மொத்தம் 3 விருதுகளை வென்றுள்ளது. மேலும், ’மகாராஜா’ படத்திற்காகச் சிறந்த சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசும், சிறந்த துணை நடிகையாக சாச்சனா நமிதாஸும் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ’மெய்யழகன்’ படத்திற்குச் சிறந்த ஒலிக்கலவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில், ’பிரம்மயுகம்’ திரைப்படத்திற்காக மம்முட்டி சிறந்த நடிகராகவும், ’ஆர்ட்டிகல் 370’ படத்திற்காக யாமி கௌதம் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ’கல்கி 2898 ஏ.டி’ சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாகவும், ’புஷ்பா 2’ சிறந்த திரைக்கதை மற்றும் ஆடை வடிவமைப்பிற்காகவும் கௌரவிக்கப்பட்டுள்ளன. அறிமுக இயக்குநர்களுக்கான பிரிவில் ’சுதந்திர வீரசாவர்க்கர்’ படத்திற்காக ரந்தீப் ஹூடா சிறந்த அறிமுக இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

#NationalFilmAwards #Rayan #Amaran #Dhanush #Sivakarthikeyan #Mammootty #TamilCinema #IndianCinema #Awards2026 #BMNews #BreakingNews #TamilNews #LatestUpdate #CinemaNews #FilmIndustry #Success #Recognition #BestFilm #BestDirector #TamilNadu

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109