ஒன்டாரியோ காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துபவர்கள் – முதல்வர் டக்பேர்ட் சந்திப்பு

ஒன்டாரியோவின் வடக்கு பிராந்தியங்களில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வரும் விமானக் குழுவினர் மற்றும் பணியாளர்களை இன்று காலை தண்டர் பே (Thunder Bay) விமான நிலையத்தில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன் என ஒன்டாறியோ முதல்வர் டக்பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது, 80-க்கும் மேற்பட்ட வாட்டர்-பாம்பர் (water-bomber) விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் உள்ள குழுவினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்; மேலும் 40 […]
மத்திய பசுபிக் சமுத்திரத்தில் மிக வலுவான எல்நினோ! – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா –

மத்திய பசுபிக் சமுத்திரத்தில் மிக மிக வலுவான எல்நினோ உருவாகுகின்றது. இன்றைய தினம் நினோ 3.4 பிராந்தியத்தில் வெப்பநிலை 1.89 பாகை செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இந்த எல்நினோவின் காரணமாக இந்து சமுத்திர வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதன்முதலாக இந்த அதிகரிப்பு வடமேற்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ( மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கரிற்கு அண்மையில்) அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் (IOD) -0.06 °C என்ற அளவில் உள்ளது. இது வேகமாக […]
கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்து ; 20 மாணவர்கள் பலி!

கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலாவிற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்சோவா (Kapchorwa) மாவட்டத்தின் செக்வாடிட் (Chekwatit) கிராமத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உகாண்டா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். ‘கிங் டேவிட் ஜூனியர்’ பாடசாலைக்குச் சொந்தமான இந்த பஸ், சிபி நீர்வீழ்ச்சிக்கான (Sipi Falls) பயணத்தை முடித்துவிட்டு தலைநகர் கம்பாலா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து […]
கடையை உடைத்து திருடிய சிறுவர்கள் கைது
கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து, ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடிய மாணவர்கள் இருவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(17.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி குறித்த இரு மாணவர்களும், எப்பாவல நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள கைபேசிக் கடையை அதிகாலை நேரத்தில் உடைத்து தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தலவ நபாதவெவ மற்றும் எப்பாவல ரொட்டவெவ பகுதிகளில் வசிக்கும் […]
கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம்

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக இந்நாட்டின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (17) […]
மத்திய மாகாண ஆளுநர் பதவி விலகல் கடிதத்துக்கு இதுவரை ஜனாதிபதி பதிலில்லை!

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, தான் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனப் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார். நேற்று (17) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆளுநர் பதவியை ஏற்கும் சந்தர்ப்பத்திலேயே, மிகக் குறுகிய காலத்திற்குள் நான் இதிலிருந்து விலகப் போவதாக ஜனாதிபதிக்குத் தெரிவித்துவிட்டே பதவியைப் பொறுப்பேற்றேன். […]
இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு; ஒக்டோபர் 27 தேர்தல்

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. இஸ்ரேல் நாடளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, நெசெட் என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்ற சபை நேற்றுடன் கலைக்கப்பட்டது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஒக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளாக காஸா மீது இஸ்ரேல் போர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அடுத்தத் தேர்தலுக்கு முன்பு பதவியைத் […]
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – சிறந்த தமிழ் படமாக ‘ராயன்’ தேர்வு

சென்னை: 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியத் திரையுலகின் மிக உயரிய இந்த விருதுகளுக்கான தேர்வில், தமிழகப் படங்கள் மற்றும் கலைஞர்கள் பல விருதுகளைக் கைப்பற்றி மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை தனுஷ் இயக்கி நடித்த ’ராயன்’ திரைப்படம் பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம், சிறந்த இயக்குநர் (ராஜ்குமார் பெரியசாமி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ்) மற்றும் சிறந்த படத்தொகுப்பு (கலைவண்ணன்) என மொத்தம் […]
சோனம் வாங்சுக் போராட்டம் கலைக்கப்பட்டதற்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்

சென்னை: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜனநாயக முறைப்படி போராடிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் அபிஜித் திப்கே ஆகியோரைக் கைது செய்துள்ள மத்திய அரசின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அடக்குமுறையானது மோடி அரசின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். கல்வி மாஃபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதுகெலும்பற்ற மோடி அரசு, உண்மையை உரக்கச் சொல்லும் […]
போதைப்பொருள் வியாபாரி கைது!
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் 3,820 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.பி.வி. கஸ்தூரி ஆராய்ச்சி வழிகாட்டலிலும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. இப்னு அஸார் நெறிப்படுத்தலில் இந்த […]