மத்திய பசுபிக் சமுத்திரத்தில் மிக வலுவான எல்நினோ! – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா –

மத்திய பசுபிக் சமுத்திரத்தில் மிக மிக வலுவான எல்நினோ உருவாகுகின்றது. இன்றைய தினம் நினோ 3.4 பிராந்தியத்தில் வெப்பநிலை 1.89 பாகை செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்துள்ளது.

இந்த எல்நினோவின் காரணமாக இந்து சமுத்திர வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதன்முதலாக இந்த அதிகரிப்பு வடமேற்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ( மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கரிற்கு அண்மையில்) அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் (IOD) -0.06 °C என்ற அளவில் உள்ளது. இது வேகமாக அதிகரித்து வருகின்றது. இது எதிர்வரும் மூன்று முதல் நான்கு வாரங்களில் நேர்மறையான (Positive) நிலைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இலங்கை உட்பட்ட பல இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பகற்பொழுது வெப்பநிலை வெப்ப அலைக்குரிய( Heat Wave) நிலையை எட்டியுள்ளது.

எல்நினோவின் உச்சம் எதிர்வரும் 2027 பெப்ரவரி மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரணமாக வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் இந்து சமுத்திரத்தின் சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் என்ற அளவிலேயே நிகழ்வதுண்டு. இந்த வெப்பநிலை அளவு அதிகரிக்கும் போதே தாழமுக்கங்கள் மற்றும் புயல்கள் தோன்றுவதுண்டு. இம்முறை எல்நினோவின் காரணமாக சராசரி வெப்பநிலையே ± 29 பாகை செல்சியஸ் என்ற அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக எந்தவிதமான நீர் மீள்நிரப்புகையும் இடம்பெறவில்லை( மழை கிடைக்கவில்லை).

கடந்த 09 நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்கமானது மிக உயர்ந்த அளவில் காணப்படுகிறது.

இந்த மிக வலுவான எல்நினோவின் பாதிப்புக்களை மீளவும் குறிப்பிட விரும்புகின்றேன்( இது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை உள்ளடக்கிய இலங்கை முழுவலற்குமானது.)

1. 2026 செப்டம்பர் வரை அதிக வெப்பநிலை, மிகக் குறைவான மழைவீழ்ச்சி, நீர்ப்பற்றாக்குறை அல்லது நீரியல் வரட்சி.

வரட்சி அதன் தன்மையைப் பொறுத்து நான்கு வகைப்படும்.
நிலை 1: வளிமண்டல வரட்சி
நிலை 2: விவசாய வரட்சி
நிலை 3: நீரியல் வரட்சி
நிலை 4: சமூக பொருளாதார வரட்சி

2. 2026 ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள். செறிவான மழைவீழ்ச்சி குறுகிய சில நாட்களில் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நீண்ட கால முன்னறிவிப்பினடிப்படையில் இக்காலப்பகுதியில்( எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்) மூன்று புயல்களுக்கும் ஐந்து தாழமுக்க நிகழ்வுகளுக்கும் வாய்ப்புண்டு.

ஏற்கெனவே தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக வேகமான காற்று காரணமாக ஆவியாக்க அளவு அதிகரித்து அதிக நீரிழப்பை எதிர்கொள்ளுகின்ற நிலையிலும் சிலர் நீரை விரயமாக பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. தற்போது நிலவும் அதிக ஆவியாக்கம் மற்றும் வரவிருக்கும் எல்நினோ நிலைமைகளைப்பற்றிய எந்தவிதமான கவலைகளுமின்றி நீரை விரயமாக்குகின்றார்கள்.

இது தொடர்பாக நீர் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்போடு தொடர்புடைய நிறுவனங்கள் விரைந்து செயற்படவேண்டும்.

அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மட்ட அமைப்புக்கள் என சகல தரப்புக்களும் வரவிருக்கும் எல்நினோ தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே வடக்கு மாகாண விவசாய அமைச்சு, யாழ்ப்பாண மாவட்ட கமநலத்திணைக்களம், வடக்கு மாகாண நீரியல் வளத்திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், MSEDO (Mannar Social and Economical Development Organization) மற்றும் கிளிநொச்சி வாழும் பெண்கள் அமைப்பு எனப் பல அமைப்புக்கள் எல்நினோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களை ஆரம்பித்துள்ளன.

தற்போதைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையில் உருவாகியிருக்கும் எல்நினோ வினால் எமக்கு வரட்சி மற்றும் வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளன. இது சாத்தியமே… ஏனெனில் எலநினோ நீண்ட நாட்களுக்கான அதிக வெப்பநிலை வரட்சியையும், குறுகிய நாட்களில் அதிக மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு விந்தையான வானிலைத் தோற்றப்பாடாகும்.

-நன்றி: பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா –

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக