ஒன்டாரியோவின் வடக்கு பிராந்தியங்களில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வரும் விமானக் குழுவினர் மற்றும் பணியாளர்களை இன்று காலை தண்டர் பே (Thunder Bay) விமான நிலையத்தில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன் என ஒன்டாறியோ முதல்வர் டக்பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தற்போது, 80-க்கும் மேற்பட்ட வாட்டர்-பாம்பர் (water-bomber) விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் உள்ள குழுவினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்; மேலும் 40 விமானங்கள் உதவிக்குத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.