காணி விடுவிப்பை வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் 25ஆவது நாளாக தொடர்போராட்டம்; ரவிகரன் எம்.பியும், சிறீதரன் எம்.பியும் பங்கேற்பு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கேப்பாப்பிலவு கிராமமக்கள் தமது பூர்வீகக் காணியை விடுவிக்க வலியுறுத்தி 25ஆவது நாளாக 18.07.2026இன்று தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் 25ஆவது நாள் தொடர்போராட்டத்தில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அத்தோடு இவ்வாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு, வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களாலும் போராட்டம் தொடர்பான […]

இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!

மத்திய மாகாண மற்றும் வடமேல் மாகாணங்களின் தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றக் கொள்கைகளில் நிலவும் முறையற்ற தன்மைகளுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மத்திய மாகாணத்தில் அண்மையில் […]

இலங்கையில் டெங்கு உயிரிழப்பு 53 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோயின் பரவல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, காய்ச்சல் அல்லது டெங்கு நோய்க்கான ஏனைய அறிகுறிகள் தென்படுமாயின், காலதாமதம் செய்யாது உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை […]

சுழிபுரம் விக்டோரியா கல்லூரி 150வது ஆண்டு விழாவில் சுமந்திரன் பிரதம விருந்தினராக வேண்டாமெனப் போராட்டம்!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாளைய தினம் நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பழைய மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டமானது இன்றையதினம்(18.07.2026) சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் “எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக வரவேண்டும்” என […]

இலங்கையருக்கு அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக பண மோசடி

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று முன்தினம் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடமிருந்து தலா 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை குறித்த நபர் பணம் பெற்றுள்ளார். அதற்கமைய, இவரால் மோசடி செய்யப்பட்ட […]

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 25வது நாளில்…

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(18.07.2026) 25ஆவது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், மக்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். தமது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள கேப்பாப்பிலவு மக்கள், பல […]

யாழ்.சாவகச்சேரியின் புதிய பிரதி நகரபிதா தெரிவு 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

யாழ்.சாவகச்சேரி நகர சபையின் பிரதி நகர பிதா கிஷோரை அந்தப் பதவியில் இருந்து விலக்கி வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் எதிர்மனுதாரர்களின் பதில் மனு தாமதமாகின்ற காரணத்தால் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தங்கள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்கின்றமை காலதாமதமாகின்ற காரணத்தால் புதிய பிரதி நகர பிதாவைத் தெரிவு செய்வதற்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட 21 […]

டொராண்டோவில் மிக மோசமான காற்று மாசுபாடு மற்றும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயின் புகை மூட்டம் டொராண்டோ நகரை முழுமையாக மூடியுள்ளதால், நகருக்கு ஆரஞ்சு நிற காற்றுத் தர எச்சரிக்கை (Orange Air Quality Warning) விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஜி.டி.எச்.ஏ (GTHA) பகுதிகளுக்குக் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான (Severe Thunderstorm Watch) எச்சரிக்கையையும் சுற்றுச்சூழல் கனடா அமைப்பு (Environment Canada) விடுத்துள்ளது. காட்டுத்தீயின் புகை காரணமாகக் காலையில் காற்றின் தரம் மிகவும் […]

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் 16 இளைஞர்கள் கைது

ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களும் 16 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம பகுதியில் அதிவேகமாகச் சென்று அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில், சைலன்சர்களை மாற்றுதல், பக்கவாட்டுக் கண்ணாடிகள் மற்றும் மண் காப்பான்களை அகற்றுதல், இலக்கத் தகடுகள் இல்லாமை மற்றும் விளக்கு அமைப்புகளில் […]

வித்தியாசமான மண்டை ஒடு; செம்மணி அகழ்வில் சம்பவம்!

செம்மணியில் வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள மண்டை ஒடு செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(18) சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 36ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவரின் என்புக் கூடு உள்ளடங்கலாக 06 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் […]