அடுத்த வாரம் நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் தனக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் தட்டிக்கழித்துள்ளதாக அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, அமைச்சருக்கு எதிராக இந்த […]
திருமாவளவன் 25 ஆண்டுகளுக்கு முன்பே அமைச்சராக இருந்திருப்பார் – மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

சென்னை: சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற ‘சமூக நீதி சங்கமம் 2026’ நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் அவர் வி.சி.க. தலைவர் திருமாவளவன் குறித்துப் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. திருமாவளவன் இளைஞர்களை ஒருங்கிணைத்து, சமூக நீதிப் பாதையில் சிறப்பாக வழிநடத்தி வருவதைப் பாராட்டிய அத்வாலே, “திருமாவளவன் 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் சேர்ந்திருந்தால், அப்போதே அவரைச் சமூக நீதித்துறை […]
’முதல் தனியார் ராக்கெட்…’ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை முன்னிறுத்தும் வகையில், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-1’, இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஐதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த ராக்கெட், பல நிலைகளைக் கொண்ட தொழில்நுட்பப் புரட்சியாகக் கருதப்படுகிறது. நண்பகல் 11.30 மணிக்கு ஏவப்பட வேண்டிய இந்த ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறிது தாமதத்திற்குப் பிறகு நண்பகல் 12.06 […]
சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது – நளின் பண்டார எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்திய முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை வரலாற்றில் முதன்முறையான சேவையில் இருந்த பொலிஸ்மா அதிபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டமை இதுவே முதன்முறையாகும்.முன்னாள் […]
ரோபோடிக்ஸ் புரட்சி; பெருந்தோட்டப் பாடசாலைகள் சாதனை

பெருந்தோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திறன்களை வளர்க்கும் நோக்கில், மூன்று நாள் ரோபோடிக்ஸ் செயன்முறைப் பயிற்சி மற்றும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது. ஹட்டன் சீடா கல்வி அபிவிருத்தி வளநிலையத்தில் இந்தப் பயிற்சி முகாம் க 2026 ஜூலை 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில், நடைபெற்றது. இதில் மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த தரம் 1AB பெருந்தோட்டப் பாடசாலைகளின் கணிதம், […]
பிக்கு ஒருவர் ஊடாகபொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் கைமாறியது?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான ‘ஹரக்கட்டா’வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200 இலட்சம் ரூபா பணத்தின் ஒரு பகுதி, பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு நேற்று(17) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. குறித்த இலஞ்ச விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ஷ மற்றும் அருண வருஷஹென்னதிகே ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு நேற்று அழைக்கப்பட்ட போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. […]
திமுக ஆட்சியில் ரூ.40 கோடி ஊழல்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் பரபரப்பு புகார்!

கோவை: கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முந்தைய திமுக ஆட்சியில் செம்மொழி பூங்காவில் ரூ.40 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காயத்ரி பரபரப்பு புகார் எழுப்பியது மாமன்ற அரங்கில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. கூட்டத்தின் தொடக்கத்தில், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மற்றும் சில கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு, ஊழல் தொடர்பாக விளக்கம் கேட்டு கோஷமிட்டனர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு […]
சர்வகால சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

சர்வகால சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புகழ்பெற்ற முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் (Sir Garfield Sobers) தனது 89 ஆவது வயதில் காலமானார். 1954 முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சோபர்ஸ், 8,032 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ரசிகர்களை மகிழ்விக்கும் இடதுகை துடுப்பாட்டக்காரரான சோபர்ஸ், 1958 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 365 […]
அலவத்துகொடவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த நிலப்பகுதியில், அடித்தளத்திற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அனர்த்தத்தின் பின்னர் அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அகுரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார். சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத […]
சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், சிறைச்சாலை […]