சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி வந்த பெண் கைது!

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த அங்கோலா நாட்டு பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் 54 வயதுடையவர் ஆவார். அவர் அங்கோலாவில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிற்கு வந்து, அங்கிருந்து கட்டாரின் தோஹா ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் அவர் சக்கர […]

 ஈரான் மீது அமெரிக்கா 7ஆவது நாளாகவும் வான்வழித் தாக்குதல்!

தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் “முடிவுக்கு வந்துவிட்டது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது இரவாகவும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் “கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை” தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை […]

பல பகுதிகளில் பலத்த காற்று

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

டாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்? – வேல்முருகன் கேள்வி

சென்னை: டாஸ்மாக் கடைகளில் புதியதாக 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்தும் தமிழக அரசின் திட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவு, கொள்கைக்கும் செயலுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அவ்வாறிருக்கையில், தற்போது புதிய வகை மதுபானங்களை […]

சென்னையில் தினமும் அம்மா உணவகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.04 லட்சமாக உயர்வு!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 383 அம்மா உணவகங்களில், தினமும் உணவருந்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 1,04,102 ஆக அதிகரித்துள்ளது. ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சென்னைக்கு பணி நிமித்தமாக வருபவர்களின் பசியைப் போக்கும் வகையில், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மற்றும் […]

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

மெக்சிகோவின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ மற்றும் குவாத்தமாலாவின் அருகிலுள்ள கடற்கரையோரங்களில் அலை மட்டத்திற்கு மேல் 0.3 முதல் 1 மீட்டர் (1-3 அடி) வரையிலான “அபாயகரமான சுனாமி அலைகள்” ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் “மிதமான தீவிரத்துடன்” உணரப்பட்ட போதிலும் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று […]

பொன் விழாவைக் கொண்டாடும் ‘பாரிஸ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு’

தேச விடுதலையின் பயணத்தில் பாரிஸ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்களை எட்டியுள்ள நிலையில் அதன் வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு தெரியப்படுத்திடவும், மீள்பார்வை செய்திடவும் வரும் 06-09-26 ல் பொன் விழா நிகழ்வு பிரான்சில் சிறப்பாக நடைபெறவுள்ளதாக அமைப்பு தனது தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

‘வி.சி.க. தேர்தலுக்காக உருவான இயக்கம் அல்ல, மக்களின் தேவைக்காக உருவானது’ – திருமாவளவன்

மதுரை: மதுரையில் நடைபெற்ற வி.சி.க. செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அக்கட்சியின் அரசியல் நோக்கம் குறித்து உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலுக்காக உருவானது அல்ல, மக்களின் தேவைக்காக உருவான பாதுகாப்பு அரண் என்று அவர் முழக்கமிட்டார். ஒரு இயக்கம் உயிர்ப்போடு இருக்க கொள்கையும், களப் போராட்டமுமே அடிப்படை என்று அவர் தெரிவித்தார். பதவி மற்றும் அதிகார வேட்கை இன்றி, மக்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதே தங்களது இலக்கு என்று அவர் கூறினார். பெரும் […]

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி பொலிஸ் சார்ஜன்ட் பலி!

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் – வவுனியா வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட்  ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியா வீதியில் 16 ஆம் ஒழுங்கைக்கு அருகில், இரட்டை பெரியகுளம்  நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். […]

முள்ளிவாய்க்கால் துப்பாக்கிச் சூடு இல்லா வலயத்தில் மனிதப் பேரவலச் சிலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்காலில், போரின் இறுதிக் கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த “துப்பாக்கிச் சூடு இல்லா வலயம்” (No Fire Zone) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சிலை, இறுதிப் போரில் உயிரிழந்த மற்றும் உயிர் தப்பிய பொதுமக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் அரிய பொது நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தச் சிலையில், காயமடைந்த அல்லது உயிரிழந்த பெண்ணின் உடலை ஒரு ஆண் சுமந்து செல்லும் காட்சியும், அவர்களுடன் அதிர்ச்சியிலும் வேதனையிலும் நிற்கும் ஒரு சிறு குழந்தையும் […]