மதுராந்தகம்:
தூய்மையான அரசியல் சக்தி என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது மக்கள் பிரதிநிதிகளைத் திருடும் சக்தியாக மாறிவிட்டதாகத் திமுக எம்.பி. கனிமொழி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திருடும் சக்தி:
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த கனிமொழி, தவெக அரசு மக்கள் பிரதிநிதிகளைத் திருடித் தேவையற்ற இடைத்தேர்தல்களைத் தமிழக மக்கள் மீது திணித்துள்ளதாக விமர்சித்தார். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து மீண்டும் களமிறங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டியே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
ஸ்வீட் ப்ரோ:
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை “ஸ்வீட் ப்ரோ” என்று அழைப்பதாகத் தெரிவித்த கனிமொழி, குழந்தைகளிடம் பிரச்சாரம் செய்து அவர்களின் பெற்றோரிடம் தனக்கு வாக்களிக்குமாறு அவர் கூறுவதாகவும் சாடினார்.
கட்சி மாற மாட்டார்கள்:
திராவிட சித்தாந்தத்திற்காகப் போராடக்கூடியவரும், ஒருபோதும் கட்சி மாறாதவருமான ஐ. பரந்தாமனை திமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அடக்குமுறைகளைக் கையாண்டாலும் திமுக தலைவர்களைக் கட்சி மாறச் செய்ய முடியாது என்றும் கனிமொழி திட்டவட்டமாகக் கூறினார்.
#Kanimozhi #DMK #TVK #CMVijay #MadurantakamByElection #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive