சென்னை:
திமுக-வின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதன்முறையாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு 4 மிக முக்கியமான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதலாவதாக, தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்றுவதற்கு எவ்வித இடமும் அளிப்பதில்லை என உறுதி எடுக்கப்பட்டது. இரண்டாவதாக, மாநிலத்தில் நிலையான ஒரு ஆட்சி அமைவதை உறுதி செய்யத் தேவையான அனைத்து முடிவுகளையும் எடுக்கத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவதாக, தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைத்தையும் விட முக்கியமாக, தவெக-விற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸைக் கடுமையாகச் சாடி நான்காவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “காங்கிரஸ் தனது பழைய குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை” என அத்தீர்மானத்தில் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே தவெக-வை காங்கிரஸ் ஆதரிப்பது துரோகம் எனத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் வேளையில், இந்தத் தீர்மானம் கூட்டணியின் விரிசலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
#DMK #MKStalin #AnnaArivalayam #MLAMeeting #Resolutions #BreakingNews #May7 #TamilNaduPolitics #CongressCondemned #UdhayanidhiStalin #ElectionResults2026 #StalinPowers #PoliticalDramaTN #DravidianPolitics #AllianceBreakup #NewGovernmentTN #Vijay #TVK #StableGovernment #TamilNews_