திருப்பூர்:
தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தவெக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
தீய கட்சி தவெக:
தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அவர், “வேறு கட்சியில் வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்ய வைத்து, மீண்டும் அவருக்கே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த தவெக ஒரு தூய கட்சி அல்ல; அது ஒரு தீய கட்சி. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முதலமைச்சர் விஜய் வெட்கக்கேடான செயலைச் செய்துள்ளார். உண்மையாகத் தேர்தலைச் சந்தித்து வென்றால் பாராட்டலாம்\” என்று சாடினார்.
டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்:
தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் அளித்த வாக்குகளை விற்று மாற்றுக்கட்சிக்குப் பணத்துக்காக விலைபோன வேட்பாளரை இந்த இடைத்தேர்தலில் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவை ராஜினாமா செய்ய வைத்த இவர்கள்தான் தூய சக்தியா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\” என்றார்.
தக்க பாடம் புகட்டுவீர்கள்:
“எவ்வளவு நயவஞ்சகமாகச் செயல்படுகிறார்கள் என்று பாருங்கள். தவெகவின் இதுபோன்ற ஜனநாயக விரோதச் செயல்பாடுகளுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என நம்புகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடையே முழங்கினார். அவரது இந்தப் பேச்சு தேர்தல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.
#EdappadiPalaniswami #EPS #TVK #AIADMK #Dharapuram #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive