மதுரை:
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் விஜய் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார்.
விஜய்க்கு மாபெரும் வரவேற்பு:
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் மதுரை சென்றடைந்தார். விமான நிலையத்திலிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரை பெருங்குடி, மண்டேலா நகர், ரிங்ரோடு வழியாக வந்த அவருக்கு மக்கள் மாபெரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தாய்மாமன் தங்க மோதிரம்:
மதுரை அரசு மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற விழாவில், 25 குழந்தைகளுக்குத் தனது கைகளால் தங்க மோதிரங்களை அணிவித்துத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பிரசவ வார்டுக்கு நேரில் சென்று அங்கு பிறந்த 10 குழந்தைகளுக்கும் மோதிரங்களை அணிவித்து, தாய்மார்களிடம் நலம் விசாரித்தார். கடந்த ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்காக மொத்தம் 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினமும் 100 குழந்தைகள் வீதம் இந்த மோதிரங்கள் வழங்கப்படும்.
2 மாவட்டங்களுக்கு விதிவிலக்கு:
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் உள்ள செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
#CMVijay #ThaimamanThangaMothiram #Madurai #TVK #GoldRingScheme #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive