கொழும்பு:
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது.
ஜனாதிபதியின் மேன்முறையீடு:
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மேன்முறையீட்டுக் கடிதம் ஒன்றினைச் சவூதி அரேபிய மன்னரிடம் சமர்ப்பிக்கும் நோக்கில் இந்தக் குழு பயணிக்கவுள்ளது. இந்த மேன்முறையீடு எதிர்வரும் ஒக்டோபர் 17-ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், இது மனிதநேய அடிப்படையில் முன்வைக்கப்படவுள்ளது.
சட்ட நிறுவனத்துடன் தொடர்பு:
இதனிடையே, சிவராசா சார்பாக மேன்முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்வதற்காக வெளிவிவகார அமைச்சு சவூதி அரேபியாவிலுள்ள சட்ட நிறுவனம் ஒன்றுடன் தொடர்புகொண்டுள்ளது.
தொடரும் போராட்டங்கள்:
சிவராசாவை விடுவிக்குமாறு வலியுறுத்திப் பல சிவில் உரிமை அமைப்புகளும் மத அமைப்புகளும் தொடர்ச்சியான பிரச்சாரங்களையும் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன. மேலும், புலம்பெயர் அமைப்புகளும் தாங்கள் இயங்கும் நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அனோஜனை விடுவிப்பதற்கு இராஜதந்திர மற்றும் மனிதநேய ஆதரவைக் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#AnojanSivarasa #SaudiArabia #SriLankaPolitics #AnuraKumaraDissanayake #HumanRights #BmNews #TamilNews #BreakingNews #TamilNewsLive