செயற்கை நுண்ணறிவு அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் இணையவழி ஆபத்துக்களின் தன்மையும் அதேவேகத்தில் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கை பொலிஸார் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்படும் படங்கள் காணொளிகள் இன்று குடும்பங்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான தொழில்நுட்ப ஆபத்தாக உருவெடுத்துள்ளது என எச்சரித்துள்ளனர்.
இது குறித்து சமூக விழிப்புணர்வு அறிக்கையில் இலங்கை பொலிஸார் இதனை தெரிவித்துள்ளதுடன் மேலும் குறிப்பிட்டு;ள்ளதாவது
டிஜிட்டல் யுகத்தில் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு இது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல்.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் சிறுவர்கள் அறியாமல் அல்லது அவர்கள் தொடர்புபட்டிருக்கா நிலையில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மாற்றி மிகவும் தத்ரூபமான ஆபாச அல்லது துஸ்பிரயோக படங்களை உருவாக்கும் திறன் தற்போது குற்றவாளிகளுக்கு கிடைத்துள்ளது.
செயற்கை தொழில்நுட்பத்தின் இந்த பயன்பாடு சிறுவர்களின் கண்ணியம் தனியுரிமை மற்றும் மனநலனிற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு சுரண்டல் ,துன்புறுத்தல் இணையவழி துன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கின்றது.