13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் இணைய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் சிறுவர்களின் இணையப் பயன்பாடு தொடர்பில் முக்கிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இதற்கமைய, 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள், இணையவழி விளையாட்டுகள் மற்றும் AI செட்போட்களை பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. அவரது யோசனையின்படி, 13 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்படும் விசேட “மினி கணக்குகள்” மூலமாக மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் […]

முல்லைத்தீவு வைத்தியசாலையின் 4 மாடிக் கட்டிட பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டு தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ நோயாளர் அறை தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று(16) பிற்பகல் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் […]

இந்தியாவில் 2027 IPL ஏலம்

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது. 2023-ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்டது. 2024-ம் ஆண்டு டுபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் […]

மட்டக்குளி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகமாக பயணித்த கார் ஒன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தையடுத்து […]

பல பகுதிகளுக்கு பிற்பகல் வேளையில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குக்குப் பிறகு […]

யாழில் அரச சேவை வலைப்பந்தாட்ட போட்டிகள்!

2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது. இலங்கை அரச சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 20 பெண்கள் அணிகள் போட்டிகளில் பங்கேற்றது. எதிர்வரும் 19 ஆம் திகதி இறுதிப் போட்டியும், விருது வழங்கும் வைபவமும் இடம்பெறும், குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் கைலாசப்பிள்ளை சிவகரன், சிறப்பு விருந்தினர்களாக அரச சேவை வலைப்பந்துப் போட்டியின் தலைவர் ரிக்ஷி நனயகரா, மணிக் அமரசேஹரா ஐக்கிய இராச்சிய […]

திருகோணமலையில் இருதய சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல் நாட்டல்

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன இருதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய இருதய நோய் சிகிச்சை பிரிவு கட்டிட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இருதய நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை வலுப்படுத்தும் வகையில், ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரகத்தினால் (JICA) சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டுத் […]

முகாமையாளரை பதவி விலகக் கோரி தொழிற்சங்கங்கள் போராட்டம்

புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவி விலகுமாறு கோரி, 26 புகையிரத தொழிற்சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்றுப் புதன்கிழமை (16) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பிலுள்ள புகையிரத திணைக்களத்தின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதிகரிக்கிறது புற்றுநோய் சிகிச்சைகளுக்குரிய நெருக்கடி!

இலங்கையின் சுகாதார அமைப்பில் நாளுக்கு நாள் கடுமையான நெருக்கடி நிலை உருவாகி வருவதுடன், இதனால் புற்றுநோயாளிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் சுகாதாரத் துறையில் எழுந்துள்ள பல்வேறு முறைகேடுகள் மற்றும் பற்றாக்குறைகள் குறித்து சுகாதார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் பலமுறை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிய போதிலும், அரசாங்கம் இதுவரை எவ்வித சாதகமான முடிவையும் எடுக்கவில்லை. தற்போது நாட்டில் […]

நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும்

நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும் என்ற நோக்கத்திலே தமிழ் பேசும் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களும், தமிழர்களும் முட்டிமோதும் நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சிறுபான்மை சமூகங்கள் மீது ஆட்சியாளர்கள் தொடர்ந்து அலட்சியப்போக்கோடு நடந்து கொள்வார்களாக இருந்தால் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் அவர்களுக்கு புகட்டிய பாடத்தைப் போன்று அடுத்துவரும் தேர்தல்களில் நல்லதொரு […]