சென்னை:
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்குச் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் தொடங்கியது. தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய், இன்று சட்டமன்ற உறுப்பினராகத் தனது முதல் பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், ஒரு நபர் ஒரு பதவி என்ற விதியின் கீழ் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, இன்று பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவர் முறைப்படி பதவியேற்றார். அவருக்குத் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும், புதிய எம்.எல்.ஏ-க்களும் அகர வரிசைப்படி பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
நாளை (மே 12) காலை 9.30 மணிக்குச் சட்டசபையின் நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுநரின் உத்தரவுப்படி, வரும் மே 13-ம் தேதிக்குள் விஜய் அரசு தனது பெரும்பான்மையைச் சட்டசபையில் நிரூபிக்க வேண்டியுள்ளது. இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் எப்போது கொண்டு வரப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 233 உறுப்பினர்களும் இன்று பதவியேற்று வருகின்றனர்.
#TNAssenbly #VijayAsMLA #Perambur #VijayAsCM #TVK #BreakingNews #May11 #TamilNaduPolitics #FortStGeorge #SpeakerKaruppiah #MLAOathTaking #ThalapathyVijay #NewGovernmentTN #MajorityTest #AssemblySession #PoliticalUpdate #NewEraTN #StalinVsVijay #ElectionResults2026 #VijayMakkalIyakkam_“`