இளைஞர் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொலை
கண்டி, கிவுல்லிந்த பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 23 வயதுடைய ஹென்னன்கெதர சுசந்த பண்டார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், தந்தையும் அவரது இரண்டாவது மனைவியின் மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோரும் இணைந்து இந்த கொலையை செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் தமது […]
கனடியதமிழர் பேரவைக்கும் முல்லைத்தீவு அங்கயற்கண்ணி உணவகத்திற்கும் எந்த தொடர்புமில்லை-கனடிய தமிழர் பேரவை

கனடியத்தமிழர் பேரவைக்கும் முல்லைத்தீவு அங்கயற்கண்ணி உணவகத்திற்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்துள்ள கனடிய தமிழர் பேரவை இலங்கையில் தமிழ் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சிகள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை நிராகரித்துள்ளது. கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் “பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக” மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார முயற்சிகள் குறித்துப் பரப்பப்படும் தவறான ஆதாரமற்ற தகவல்களைக் கனடியத் தமிழர் பேரவை முற்றிலும் மறுக்கிறது கனடியத் தமிழர் பேரவை (CTC) இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம், இலங்கையின் வடக்கு […]
பொலிஸ் முறைப்பாடுகளுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
வீதி பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோதமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் குழாய்களைக் கொண்ட வாகனங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் முறையான தகுதிச் சான்றிதழ்கள்இன்றி, ஆபத்தான முறையில் உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இடம்பெற்ற பஸ் விபத்துகளை ஆய்வு செய்ததில், பெரும்பாலான பஸ்கள் உரிய அனுமதி இன்றி உருமாற்றம் செய்யப்பட்டிருந்தமையும், வீதி தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றிருக்கவில்லை […]
மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில், வயல் நிலமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(11.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர், சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சரவனமுத்து பாலசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 08ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற வரவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயல் பகுதியொன்றில் இவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் மூன்று பேர் சந்கேதத்தின் […]
சிசு மரணத்திற்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கும் தொடர்பில்லை; திருமலை சம்பவம் குறித்து விளக்கம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவத்திற்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சங்கத்தின் உப தலைவர், விசேட வைத்திய நிபுணர் சந்திக எபிடகடுவ, பிரசவ அறை சிகிச்சைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் அடங்குவதால், தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது வைத்தியர்கள் ஒருபோதும் அவசர சிகிச்சைகளில் […]
மண்சரிவு அபாயம்!
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தித்வா புயலின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கொட்டிக் கிடந்த மண் மேட்டினை வெட்டி அகற்றப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் மீண்டும் பெய்த கடுமையான மழைக் காரணமாக அதே இடத்தில் மற்றொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், சம்பவ இடத்திலிருந்து இடிபாடுகளை […]
கைபேசிக் கடைகளில் நூதனமாகத் திருட்டு

கண்டி மாவட்டம், அலிமுடுக்கு பகுதியில் உள்ள இரண்டு கைபேசி கடைகளுக்கு வாடிக்கையாளர் போல் நடித்து சென்று, ஒரே நாளில் இரண்டு பெறுமதிமிக்க கைபேசிகளை திருடிச் சென்ற நபர் குறித்து கண்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (08) அன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கைபேசிகளை திருடும் காட்சிகள் அங்குள்ள பாதுகாப்பு கேமராக்களில் (CCTV) மிக தெளிவாக பதிவாகியுள்ளன. சந்தேக நபர், கைபேசி ஒன்றை கொள்வனவு செய்யப் போவதாக கூறி, ஒரே நாளில் […]
விமல் வீரவங்சவின் மனைவிக்கு எதிரான கடவுச்சீட்டு வழக்கு ஒத்திவைப்பு

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முறையற்ற வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்சவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, வரும் 25 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியான சசி வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி புத்திக சந்திரசேகர நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், இந்த வழக்கின் […]
18 நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக அறிவிப்பு!

தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.டி.பி.எஸ்.டி. ஹேரத் இது குறித்து தெரிவிக்கையில், அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜங்கனை, பதுளை மாவட்டத்தின் சொரபொர வாவி, கண்டி மாவட்டத்தின் வே மெடில்ல நீர்த்தேக்கம், தேவஹூவ, நாலந்த, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில, யோத எல, […]
மட்டக்களப்பில் எல்லைக் கிராமங்களைச் சிங்கள மயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

மட்டக்களப்பில் எல்லைக் கிராமங்களைச் சிங்களமயமாக்கும் திட்டத்தை, இங்கு தமிழ் தேசியம் பேசித் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அம்பலப்படுத்தவில்லை? வடக்கில் எம்.ஏ. சுமந்திரன் போல, கிழக்கில் இரா. சாணக்கியன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி பணியவைத்து, இந்தச் சிங்களமயமாக்கலுக்குத் துணைபோகும் திட்டத்தை வகுத்துள்ளாரா? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வடமுனை – ஊத்துச்சேனை மக்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று (10) […]