கனடியதமிழர் பேரவைக்கும் முல்லைத்தீவு அங்கயற்கண்ணி உணவகத்திற்கும் எந்த தொடர்புமில்லை-கனடிய தமிழர் பேரவை

கனடியத்தமிழர் பேரவைக்கும் முல்லைத்தீவு அங்கயற்கண்ணி உணவகத்திற்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்துள்ள கனடிய தமிழர் பேரவை இலங்கையில் தமிழ் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சிகள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை நிராகரித்துள்ளது.
கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கையில் “பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக” மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார முயற்சிகள் குறித்துப் பரப்பப்படும் தவறான ஆதாரமற்ற தகவல்களைக் கனடியத் தமிழர் பேரவை முற்றிலும் மறுக்கிறது
கனடியத் தமிழர் பேரவை (CTC) இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் எங்களது பொருளாதார அபிவிருத்தி முயற்சிகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தீங்கிழைக்கும் தவறான தகவல்களை முற்றிலுமாக மறுக்கிறது.
வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி மையத்துடன் (NEED Centre) இணைந்து, கனடியத் தமிழர் பேரவை பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிலையான பொருளாதாரத்தை உருவாக்கும் தனது பணியில் உறுதியாக நிற்கிறது.
இந்த முயற்சியின் முக்கிய அங்கமாகக், கனடியத் தமிழர் பேரவையின் நிதியுதவியில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி மையம் நடைமுறைப்படுத்தும் “முல்லைத்தீவில் தயாரானது” (Made in Mullaitivu) என்ற திட்டம், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் பொருளாதார சுதந்திரத்தைப் பெறவும், தங்கள் உற்பத்திகளை மேம்படுத்தவும் உதவும் ஒரு அர்ப்பணிப்பான தளமாகச் செயற்படுகிறது.
இதன் அடிப்படையில், “முல்லைத்தீவில் தயாரானது” (Made in Mullaitivu) என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக இரண்டு விற்பனை நிலையங்கள் மட்டுமே உள்ளன என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஒரு விற்பனை நிலையம் முல்லைத்தீவு நகரத்தில் புதிய பேருந்து நிலைய வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இரண்டாவது முறிகண்டியில் (A9 வீதி) அமைந்துள்ள உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான காட்சிசாலை மற்றும் விற்பனை நிலையம் ஆகும்.
சமீபத்தில் பரவும் வதந்திகள், கனடியத் தமிழர் பேரவை “அங்கயற்கண்ணி” என்ற உணவகத்தைக் கையகப்படுத்தியதாகப் பொய்களைக் கூறுகின்றன.
“அங்கயற்கண்ணி உணவகம்” என்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் வேறோர் இடத்தில் அமைந்துள்ள முற்றிலும் வேறுபட்ட உணவகமாகும். கனடியத் தமிழர் பேரவைக்கும் இந்த “அங்கயற்கண்ணி” உணவகத்திற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை.
முறிகண்டி என்ற இடத்தில், உள்ள “முல்லைத்தீவில் தயாரானது (Made in Mullaitivu)” காட்சிசாலை, அரியாத்தை சைவ உணவகத்துடன் இடத்தைப் பகிர்ந்துகொள்கிறது. மற்றும் A9 வீதியில் சுத்தமான “கழிப்பிட வசதிகள்” சேவையை இயக்குகிறது. எனினும், இந்த “அரியாத்தை உணவகம்” சுயாதீனமாக இயங்குகிறது.
கனடியத் தமிழர் பேரவையும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி மையமும், “Made in Mullaitivu” என்ற உள்ளூர் உற்பத்தியாளர்களின் காட்சிசாலை உள்ளடங்கிய விற்பனை நிலையத்துக்கு மட்டுமே பொறுப்பு. அந்த இடத்தில் இயங்கும் அரியாத்தை உணவகத்துடன் அவற்றுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அங்கயற்கண்ணி உணவகம் உட்பட அனைத்து அரியாத்தை உணவகங்களும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன அல்லது ஒருங்கிணைக்கப்படுகின்றன.
பல வருட மூலோபாய திட்டமிடலாலும், நமது தாயகத்தில் உண்மையாக அக்கறை கொண்டவர்களின் கடும் உழைப்பினாலும் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சிலர் திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்துகொண்டு இத்தகைய மக்கள் நலன்புரித் திட்டங்களை அழிக்கும் சொகுசுப் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, மற்றவர்கள் தரையில் இறங்கி கடின உழைப்புடன் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களைக் கட்டமைக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
பொய்களைப் புனைந்து, உணர்ச்சி ஆட்ட உசுப்பேற்றலைப் பரப்புபவர்கள் எதையும் உருவாக்கும் பார்வையோ திறனோ இல்லாதவர்கள் என்பது தெளிவு.
அவர்களின் செயல்கள், தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகச் சீர்குலைக்கும் முயற்சியாகும்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குச் சந்தை கிடைப்பது, வறிய குடும்பங்கள் நிலைத்தன்மை பெறுவது, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரம் மேம்படுதல் போன்றவற்றால் துன்புறும் மக்களின் வாழ்க்கை மாற்றம் அடைவதை நேரில் காணும் தாக்கத்தால் நாங்கள் உந்தப்படுகிறோம்.
உரிய முடிவுகளே எங்களுக்குத் தேவையான ஒரே சான்று.
எமது சமூகத்தினர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பொய்யான கதைகள் உண்மையில் மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சிகள் என்பதை அடையாளம் காணுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்துகிறோம்.
கனடியத் தமிழர் பேரவை அழிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. உருவாக்குபவர்களுக்கு உறுதுணை புரிவதில் உறுதியாக நிற்கிறது. எமது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான எமது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. நமது தாயகத்திற்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யத் தொடர்ந்து அயராது உழைப்போம்
va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ