உலகளாவிய ஹெபடைடிஸ் ஒழிப்பு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்கள் பட்டியலில், இலங்கையின் தேசிய பால்வினை நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் வைத்திய நிபுணர் சத்யா ஹேரத் இடம்பெற்றுள்ளார்.
ஜூலை 28 ஆம் திகதி உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இப்பட்டியலில், விழிப்புணர்வு, கொள்கை உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் சேவை ஆற்றிய உலகின் நால்வரில் ஒருவராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் தெற்றுஏற்படும் அபாயமுள்ள குழுக்களிடையே ஹெபடைடிஸ் C பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை அதிகரித்தமைக்காகவும், ‘ஒரே இடத்தில் அனைத்து சேவைகளும் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியமைக்காகவும் குறித் வைத்தியருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
வைத்தியரின் வழிகாட்டலில் ஊசி, சிரிஞ்சி பரிமாற்ற திட்டம் மற்றும் சமூகம் சார்ந்த ஹெபடைடிஸ் C சிகிச்சை என்பன நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன. 2030 ஆம் ஆண்டிற்குள் ஹெபடைடிஸ் நோயை முழுமையாக ஒழிக்கும் உலகளாவிய இலக்கை அடைவதற்கு, இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.