மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்சனைகளில் முதல்வர் ஜோசப் விஜய் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘காவிரி நீர் உரிமையும்… தமிழகத்தின் […]
தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம் இன்று (ஜூலை 26) தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று, தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், போராட்டத்தை கைவிடுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது. இதற்கு […]
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இது குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை நேரில் வந்து அளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலர் சாந்தி கடிதம் எழுதியுள்ளார். தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களான சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், முனைவர் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரிடம் சபாநாயகர் மீண்டும் விசாரணையை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இதுவரை போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். போக்குவரத்து தேவைகளுக்காக இதுவரை தற்காலிகப் பாலம் கூட அமைக்கப்படாததால், அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். […]
எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க நாடுகள் சுமார் 10 பில்லியன் முதல் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும் என ஆபிரிக்க அபிவிருத்தி வங்கியின் காலநிலை மாற்றப் பிரிவு இயக்குநர் ஆண்டனி நியோங் எச்சரித்துள்ளார். இந்த தீவிர வானிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 1% முதல் 2% வரை குறையக்கூடும் […]
இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க பிரிவினரால் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர இரண்டு சகோதரர்கள் முற்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK652 […]
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு கேட்பது என தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை(25) தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிகள் படுகொலை பொது நாள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் மார்கழி மாதம் ஜனாதிபதி அநுரகுமார […]
45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள் அருகே உள்ள யோங்ஷு பாறைப் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் பயணம் செய்த 62 பேரில் 45 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீட்புப் பணிகளில் உடனடியாக உதவி வழங்கி 45 பேரைக் காப்பாற்ற உதவிய சீன அரசு மற்றும் அதன் மீட்புக் குழுவினருக்கு […]
நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யோங் வீதி (Yonge Street) மற்றும் எம்ப்ரஸ் அவென்யூ (Empress Avenue) பகுதியில் சந்தேகத்திற்கிடமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, பிற்பகல் 1:10 மணிக்குச் சற்று முன்னர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, குறித்த நபர் தனது ஜாக்கெட் (jacket) பைக்குள்ளிருந்து துப்பாக்கி ஒன்றை வெளியே எடுத்து, […]
கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமூக வலைத்தளப் பதிவொன்றில் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, சனிக்கிழமை இரவு 10:00 மணிக்குச் சற்று முன்னர் ப்ளூர் வீதி மேற்கு (Bloor Street West) மற்றும் கிறிஸ்டி வீதி (Christie Street) பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்தபோது, கத்திக் குத்துக் […]